பொம்மை டாஸ்கில் எல்லை மீறிய அசீம் : கண்டிப்பாரா கமல்ஹாசன்?
தொடக்கத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டில் தனது ஆளுமையை செலுத்தி வரும் தனலட்சுமி, சகபோட்டியளார்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்த ஜி.பி.முத்துவுடன் முதல் நாளே தனது மோதலை தொடங்கினார்.
தொடக்கத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டில் தனது ஆளுமையை செலுத்தி வரும் தனலட்சுமி, சகபோட்டியளார்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்த ஜி.பி.முத்துவுடன் முதல் நாளே தனது மோதலை தொடங்கினார்.
முதல் நாளில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்போது அசீம் – தனலட்சுமி மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக அறிமுகதில்லாத பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்த சீசன் முதல் நாளில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடக்கத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டில் தனது ஆளுமையை செலுத்தி வரும் தனலட்சுமி, சகபோட்டியளார்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்த ஜி.பி.முத்துவுடன் முதல் நாளே தனது மோதலை தொடங்கினார். அதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் மோதல் தான் என்று சொல்லும் அளவுக்கு கடந்த வாரம் அசல் கொலாருடன் மோதினார்.
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அசீமுடன் மோதியுள்ளார். அதேபோல் அசீமும் தனது வில்லத்தனத்தை காட்டி வருகிறார். இதனால் கடந்த வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சரியான பதிலடி கொடுத்த நிலையில், இந்த வாரம் எப்படியாவது நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற என்னத்தில் சில பல வேலைகளை செய்து வரும் அசீம் மீண்டும் சர்ச்சையில் தான் சிக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
அதிலும் தனலட்சுமியுடன் இவரது மோதல் பரபரப்பின் உச்சம். தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கில், நீயல்லாம் ஒரு பொண்ணா? சென்ஸ் இல்லையா என்று ஒருமையில் கேள்வி கேட்டு அதிரடி வைத்த அசீம், இன்றைய எபிசோட்டில் தனலட்சுமியை கீழே தள்ளிவிட்டு தனது எக்ஸ்ட்ரீம் வில்லத்தனத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் அசீமை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தனலட்சுமி செய்யாத தவறுக்காக ஏன் இப்படி அவரை கார்னர் செய்கிறீர்கள் என்று அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அசீமின் பொம்மையை அசல் உள்ளே கொண்டு சென்றதை ஜனனியும் தனலட்சுமியும் தடுக்கின்றனர்.
இதனால் கடுப்பான அசீம் தனலட்சுமி தள்ளி விடுகிறார். இத்துடன் பரமோ முடிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கடந்த வாரமே ரெட் கார்டு வாங்கிய அசீமை இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது குறும்படம் காண்பிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil