Advertisment

பிக்பாஸில் ரொமான்ஸ் பேபி: வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் வெளியாக கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் இணைந்து நடித்திருந்தார்.

author-image
WebDesk
Jun 14, 2023 15:54 IST
New Update
Lasliya

நடிகை லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா. அதனைத் தொடர்ந்து தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தார். இதில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் வெளியாக கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் இணைந்து நடித்திருந்தார்.

Advertisment
publive-image

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த லாஸ்லியா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் லாஸ்லியா உடல் எடையை குறைத்து வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

திடீரென லாஸ்லியா ஒல்லியாக மாறியது எப்படி என்று கூறி நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியமடைந்த நிலையில், தற்போது அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

publive-image

உடல் எடையை குறைக்க முடிவு செய்த லாஸ்லியா அதன்பிறகு மட்டன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார். ப்ரோட்டீன் தேவைப்படுவதால் சிக்கன் மட்டும் சாப்பிட்டு வருகிறார்.

publive-image

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ஜிம் ஒர்கவுட் மற்றும் 2 மணி நேரம் யோகா செய்யும் லாஸ்லியா, அரிசி சாதத்திற்கு பதிலாக தினை வகைகளை மதிய உணவாக உட்கொள்கிறார்.

publive-image

இதில் சாமை, தினை, குதிரை வாலி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினை வகையை உணவாக சாப்பிட்டுள்ளார். முக்கியமாக உடல் எடையை குறைக்க க்ரீன் ஆப்பிள் மிகவும் அதிகம் உதவியது என்று கூறியுள்ளார்.

publive-image

ஏனென்றால் இந்த க்ரீன் ஆப்பிளில் சக்கரை மிக மிக குறைவு என்கின்றனர். காலை கோதுமை ரொட்டி, மதியம் தினை வகை உணவு, மாலை ஜூஸ் மற்றும் சான்வெட்ஜ் தான் லாஸ்லியா பின்பற்றிய உணவு முறை.

publive-image

இரவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பதாக கூறியுள்ளார். இதுதான் லாஸ்லியாவின் உடல் எடையை குறைக்க உதவியது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment