சமந்தா நடித்த 'யசோதா', சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ஆகிய படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய ஹாலிவுட் ஆக்ஷன் கொரியோகிராஃபர் யானிக் பென் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இவர் இயக்கும் முதல் படததில், பிக்பாஸ் புகழ் நடிகை மாயா கிருஷணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாயா. அதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல், சமீபத்தில் வெளியான விஜயின் லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த மாயா, தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே யானிக் பென் படம் குறித்து தெரிவித்த மாயா, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அவரது அடுத்த படம் குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். யானிக் பென் முன்பு சமந்தாவுடன் 'ஃபேமிலி மேன் 2' வெப்சீரிஸுக்கு அதிரடி நடன இயக்குனராகவும் பணியாற்றினார்.
மேலும்'டிரான்ஸ்போர்ட்டர் 3', 'புராஜெக்ட் 7', 'பாரிஸ் பை நைட் ஆஃப் லிவிங் டெட்', 'சிட்டி ஹண்டர்', கிறிஸ்டோபர் நோலன் படங்களான 'இன்செப்ஷன்', 'டன்கிர்க்', ஷாருக்கானின் 'ரயீஸ்', சல்மான் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார். 'டைகர் ஜிந்தா ஹை', பவன் கல்யாணின் 'அத்தாரிண்டிகி தாரேதி', மகேஷ் பாபுவின் 1 – நேனோக்கடைன் உள்ளிட்ட தென்னிந்திய படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“