விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தன்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அப்போது தன்னிடம் பணம் மோசடி செய்ததாகவும், கிருபா முனுசாமி என்பவர் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த சீசனில் பங்கேற்ற விக்ரமன் அனைவருக்கும் அறிந்த ஒரு முகமாக உள்ளார். நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து முடியும் வரை நேர்மையாக விளையாடிய இவர் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் அசீம் சாம்பியனாக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு விக்ரமனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த நிலையில், சமீபத்தில் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகவும் கூறிய வழக்கறிஞரான கிருபா முனுசாமி பல அடுக்கடுக்கான புகார்களை பதிவு செய்திருந்தார்.
மேலும் இந்த புகார்களுக்கு ஆதாரமாக விக்ரமனுடன் பேசிய வாட்ஸ்அப் மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டிருந்தார், மேலும் என்னுடன் இருந்தபோது போன், கார் வாட்ச் உள்ளிட்ட பல பொருட்கள் என்னுடைய காசில் தான் வாங்கியது என்றும், இது எதற்குமே எனக்கு பணம் கொடுத்ததில்லை. சமீப காலமாக அவர் என்னை வெறுக்கிறார். எனது சாதி பெயரை சொல்லி பேசுகிறார் என்று கூறியிருந்தார்.
கிருபாவின் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் விக்ரமன் பதில் அளித்திருந்த நிலையில், தற்போது ஜோ மைக்கல் என்பவர் இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கிருபா ஒரு வழக்கறிஞர் தான் என்றாலும் கூட அவர் ஆதாரமாக வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்ஸ் எல்லமே முதலில் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டு இதில் போட்டோஷாப் செய்திருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதேபோல் அவர் வெளியிட்ட அனைத்து ஸ்கிரீன்ஷாட்களிலும் விக்ரமனின் ரிப்ளே வெவ்வேறு டேட்களில் இருப்பதால், எந்த ஒரு சாட்டும் தொடர்ச்சியாக இல்லை. இதனால் இந்த ஆதாரங்கள் உண்மையா அல்லது போலியா என்ற சந்தேகம் வருகிறது. அதேபோல் தான் பணம் கொடுத்துவிட்டதாக விக்ரமன் ஷேர் செய்த ஸ்கிரீன்ஷாட்கள் கிருபாவுக்கு கிடைக்கவில்லையா, அல்லது அவர்கள் பேங்க் தரப்பில் பணம் வரவில்லையா என்பது குறித்து கிருபா முனுசாமி பதில் கொடுக்க வேண்டும்.
விசிகே கட்சியில் இருந்து விக்ரமனை நீக்க வேண்டும். அவர் அந்த கட்சியில் இருக்க தகுதியே இல்லாதவர் என்று கிருபா சொன்னது எல்லாமே அவரை கட்சியில் இருந்து வெளியேற்றும் முயற்சிதான். மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விக்ரமன் ஷேர் செய்த ஸ்கிரீன்ஷாட்கள் ஒன்றில் கூட கிருபாவின் ஜாதி தொடர்பான எந்த பேச்சும் இழிவு படுத்தும்படியாக பேச்சும் இல்லை.
அதேபோல் நாங்கள் 2020-ல் இருந்து 22 வரைக்கும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என்று சொல்லியிருக்கார். ஆனால் பொம்மை நாயகி பிரீமியர் ஷோவுக்கு விக்ரமனுடன் கிருபா சேர்ந்து வந்திருந்தார். அவர்கள் 2022-ல் ரிலேஷன்ஷிப் முடிந்துவிட்டது என்றால் இந்த நிகழ்வு எப்படி நடந்தது? தனது பேஸ்புக்கில் தான் பகிர்ந்த் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் கிருமா டெலிட் செய்துள்ளார். இது முழுக்க முழுக்க விக்ரமனை டார்கெட் செய்யும் விதமாகத்தான் இதை செய்திருக்கிறார்.
விக்ரமன் பிக்பாஸ் விட்டு வெளியேறிய மறுநாளே தனது நண்பர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கிருபாவும் இருந்துள்ளார். அப்போ வரைக்கும் விக்ரமனும் கிருபாவும் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் விக்ரமன் பிக்பாஸ் போவதை தன்னிடம் சொல்லவில்லை என்று கிருபா கூறியுள்ளார். அப்போ இந்த போட்டோக்களுக்கு எல்லாம் அர்த்தம் என்ன? ஏப்ரல் 5-ந் தேதி செலவு செய்த பணம் அனைத்தையும் கிருபா கேட்டதாகவும் அடுத்த நாளே (ஏப்ரல் 6) விக்ரமன் அனைத்து பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டார். ஆனால் கிருபா இதைதான் தற்போது பெரிய குற்றச்சாட்டாக சொல்கிறார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.