Biggboss Nadia Chang Update : ரசிகர்களின் கவனத்தை தன்மீது திருப்புவதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வரும் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இதில் நடக்கும் மோதல், மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்று கூறலாம்.
இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக அதிக புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், முதல்முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் திருநங்கை நமீதா மாரிமுத்து மருத்துவ பிரச்சனை காரணமாக ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் யாரும் எலிமினேட் ஆகாத நிலையில், கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மலேசியாவில் இருந்து வந்த நாடியா சங் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் 3-வது சீசனில் மலேசியாவில் இருந்து வந்த முகின் டைட்டில் வென்று அனைவரையும் வியக்கவைத்த நிலையில், நாடியா சங் அதே போன்று நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2-வது வாரததிலேயே வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் போட்டியாளர்கள் கதை நேரத்தில் தனது வாழ்வில் சம்பவங்களை எடுத்து கூறிய நாடிய சங் அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் கணவரை நினைத்து பிரியங்கா புலம்பியது பெரும் வைரலாக மாறியது.
மலேசியாவில் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான நாடியா சங் 2-வது வாரத்தில் வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பதினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, நான் இவ்ளோ சீக்கிரம் வெளியே போவேன் என எதிர்பார்க்கவில்லை என கமல்ஹாசனிடம் கூறிவிட்டு சென்றார். தற்போது இவர் வெளியேறியது குறித்து அவரது குடும்பதினர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கொடுக்கும் சம்பளத்தை விட, மலேசியாவில் இருந்து வந்த செலவு அதிகம் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடியா சங் பிக் பாஸ் வீட்டில் இரண்டு வாரங்கள் இருந்ததற்காக ஒரு தொகை சம்பளமாக தரப்படுகிறது, இந்த சம்பளம் ஏற்கனவே ஆனா செலவுகளால் அதை ஈடுகட்ட முடியாது என கூறி உள்ளனர்.போக்குவரத்துக்கு செலவு, தங்கியது என பல விதங்களில் அதிக அளவு தொகை செலவிட்டு இருக்கிறோம். வரும் சம்பளத்தை விட அது மிக அதிகம் என கூறி உள்ளனர். மேலும பிக்பாஸ் நிகழ்ச்சி வாக்கெடுப்பில் இந்தியாவில் இருப்பவர்கள் வாக்களிக்க முடியும் என்ற கட்டுப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த நாடியாவின் குடும்பத்தினர், மலேசியாவில் இருக்கும் அவரது ரசிகர்கள் வாக்களிக்க முடிந்திருந்தால் நிச்சயம் அவர் எலிமினேட் ஆகி இருக்கமாட்டார் என்றும், விஜய் டிவி இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையையும் வைத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil