பிக்பாஸ் சீசன் 5 : மற்ற போட்டியாளர்களை வீழ்த்தி முதல் இடம் பெற்ற பிரியங்கா…

Tamil Biggboss Update பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். ஆதே சமயம் நிகழ்ச்சியின் கலந்துகொள்ளும் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படும்.

Biggboss Season 5 Update in tamil :விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அடுத்த வாரம் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. 18 போட்டியாளர்களுடன் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த இருவருடன் சேர்த்து மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ரசிகர்கள் அளிக்கு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது பிரியங்கா, ராஜூ, பாவனி, அமீர் நிரூப் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஐந்துபேரில் யார் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஏற்பட்டுள்ள நிலையில், இறுதிவாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். ஆதே சமயம் நிகழ்ச்சியின் கலந்துகொள்ளும் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு சீசனில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரியங்கா

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா நடப்பு சீசனில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். நடப்பு சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இவருக்குதான் அதிக சம்பளம். இவர் ஒருநாளைக்கு, ரூ50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமான் அண்ணாச்சி

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் இமான் அண்ணாச்சிக்கு’, நாள் ஒன்றுக்கு ரூ 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய தகவலாக இமான் அண்ணாச்சி ஒரு குறிப்பிட்ட நாள் மட்டுமே பிக்பாஸ் வீ்ட்டில் இருக்க முடியும் என்று சொல்லிவிட்டுதான் உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாவனி

விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான பாவனிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம். அவரும் தற்போது நிகழ்ச்சியில், 100 நாட்களை கடந்துள்ளது.

சின்னப் பொண்ணு, ராஜு, அபிஷேக், அபிநய்:

இதில் ராஜூ மட்டுமே விஜய் டிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மற்ற மூவரும் பிரபலம் இல்லாத நிலையில், இவர்கள் நால்வருக்கும் ஒருநாள் சம்பளமாக ரூ 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசைவாணி, அக்‌ஷரா

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலம் இல்லாத இவர்கள் இருவருக்கும் நாள் ணன்றுக்கு ரூ.15,000 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. .

ஸ்ருதி, ஐக்கி, நிரூப், சிபி, தாமரை:

இவர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ரூ 10,000 வழக்கப்பட்டுள்ளதாம். இதில் டிக்கெட் :டூ பிளாலே சுற்றை பயன்படுத்தி 12 லட்ச ரூபாய் ப€த்தை எடுத்தக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

வருண்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் சம்பளமே வேண்டாம் என்று கலந்துகொண்டதாகவும், அவருக்கு கவுரவ ஊதியமாக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil biggboss season 5 contestants salary update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com