கண்ணீரில் நனைந்த பிக் பாஸ் வீடு: நமீதா, மதுமிதா சோகக் கதை

Biggboss Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் முதல் நாளில் இருந்து நாள்தோறும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது

Biggboss Episode Update : ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் பிக்பாஸ் வீட்டில் நாள்தோறும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது போட்டியாளர்கள் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்வில் 2 போட்டியாளர்கள் தங்கள் கடந்துவந்த பாதை குறித்து பேசியது அனைவரையும் கண்ணீரில் நனைத்த்து.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் தங்களை பற்றிய அறிமுகம் மற்றும் தங்கள் கடந்துவந்த பாதை குறித்து பேசி வருகின்றனர். இதில் முதலில்  இசைவாணி, சின்னப்பொண்ணு பேசினார்கள். இதையடுத்து இமான் அண்ணாச்சி, ஸ்ருதி நமிதா மாரிமுத்து ஆகியோர் தங்களது வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர்.  இதில் அன்பு பாசத்துடன் தன்னை வளர்த் அம்மா, அப்பா தான் திருநங்கையான பிறகு ஏற்றுக்கொள்ள மறுத்து என்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்று நமிதா மாரிமுத்து கூறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கினர்.

இதையடுத்து பேசிய மதுமிதா, என் பெயர் மதுமிதா ரகுநாதன், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஜெர்மனி. எனக்கு ஒரு அக்கா. அவங்க ஆஸ்திரேலியாவில் இருக்காங்க. எனக்கு பேஷன்டிசைன் படிக்கனும்னு ஆசை, அதற்காகத்தான்  நான் மாடலிங்கிற்கு வந்தேன். அக்காவிற்கு திருமணம் ஆனதும் அக்கா கூடவே நானும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். விசா பிரச்சினையால் மீண்டும் ஜெர்மனி வந்தேன் ஆனால் இங்கு பேஷன்டிசைன் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைவு என்பதால் இன்ஜினியரிங் படித்தேன்.

புடிச்ச படிப்பு கிடைக்கல… புடிச்ச வாழ்க்கை கிடைக்கல… இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதற்காக பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயற்சியும் செய்தேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்த அவரை, பிரியங்கா கட்டி அனைத்து கவலைப்படாதே என்று கூறி தேற்றினார். தொடர்ந்து நெட்டிசன்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிறந்து இருந்தாலும் மதுமிதா அழகாக தமிழில் பேசினார். என்று கூறி வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil biggboss season 5 episode review in tamil

Next Story
பிக் பாஸ் டைட்டில் வின்னர் வாய்ப்பு; பாவனி அழறத நிறுத்தி சிரிக்க வச்சுட்டாக… இப்படியே இருங்க பிரியங்கா!bigg boss tamil 5, bigg boss season 5, vijay tv, bigg boss, பிக் பாஸ், பிரியங்கா, பாவனி ரெட்டி, பிக் பாஸ் சீசன் 5, priyanka, pavani reddy, bigg boss tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X