Biggboss Promo Update In Tamil : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் ரியலிட்டி ஷோ பிக்பாஸ். பெருமபாலும் போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் மோதல் அதிகமாக இருந்தாலும் ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளர் கமலஹாசன் என்று கூறலாம். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
Advertisment
வழக்கத்திற்கு மாறக அதிகமான புதுமுகங்களுடன் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இ்ந்நிகழ்ச்சியில் இதுவரை 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 போட்டியாளாகள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியிட்டு வருகின்றனர். இதில் அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்லாது வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு குறித்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் கொடுத்த அறிவிப்பை இசைவாணி வாசிக்கிறார். அதில் போட்டியாளர்கள் அனைவரும் இரு குழுவாக பிரிந்து பட்டிக்காடா பட்டணமா என்ற பெயரில் விவாதம் நடத்த வேண்டு என்று என்று சொல்லப்படுகிறது. விவாதம் தொடங்கியதும், போட்டியாளர் தாமரை சக போட்டியாளரை நீங்கள் உடுத்தும் உடை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்.
Advertisment
Advertisements
அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிபி, நீங்க சொன்னது சரியில்லை. அது அவங்களோ இஷ்டம் நீங்க முதலில் அடக்கமா இருக்கீங்களா என்று கேட்கிறார். அதன்பிறகு சிபி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அங்கே வரும் தாமரை அடக்கம் உங்ககிட்ட இருக்கானு கேட்டீங்களே நான் என்ன சாமி பண்ண என்ற என்ன அடக்கம் இல்லாததை நீங்கள் பார்த்தீர்கள் என்று கேட்கிறார். அப்போது விவாதம் பெரியதாகிறது. அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இந்த ப்ரமோவ பார்த்த ரசிகர்கள் பலரும் அடக்கம் என்பது உடுத்தும் உடையில் மட்டும் இல்லை, பேசும் வார்த்தைகளிலும் உள்ளது, அதை தான் சிபி சுட்டிக் காட்டுகிறார். சிறப்பு என்று பதிவிட்டுள்ளனர். மற்றொரு ரசிகர் கொஞ்ச கொஞ்சமா வனிதாவாக மாறும் தாமரையை பார் என்று கூறியுள்ளார். தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட நடிகை வனிதா இதன் மூலம் மீண்டும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil