Advertisment

Bigg Boss Tamil: எலிமினேஷன் இவங்கதானா? கமல் வைத்த சஸ்பென்ஸ்!

Tamil Biggboss Update : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் எலிமினேஷன் என்பது குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil: எலிமினேஷன் இவங்கதானா? கமல் வைத்த சஸ்பென்ஸ்!

Biggboss Promo Update : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வழங்கத்திற்கு மாறாக புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இதில் வாரத்தில் இரு நாட்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் நிறை குறைகளை சுட்டிக்காட்டவும், அந்த வாரத்தில் போட்டியாளர்களில் யார் வெளியேற்றப்படுவார் என்ற அறிவிப்பையும் வெளியிடுவார். அந்த வகையில் கடந்த வார தொடக்கத்தில் போட்டியாளர் நமீதா மாரிமுத்து வெளியேறியதால், மற்ற போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில், இந்த வாரத்தில் கமல்ஹாசன் பங்கேற்கும் வார இறுதி நிகழ்ச்சிகான ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற பெரும் எதிர்பார்பு எழுந்துள்ள நிலையில், ப்ரமோவில் தோன்றும் கமல்ஹாசன், "கடந்து வந்த பாதையையும் அவர்கள் கதைகளையும் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். 15 பேர் வீட்டில் இருந்து நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நுழைந்து தாவணிய செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் அளித்திருக்கும் வாக்குகள் இந்த வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இன்றிலிருந்தே பார்க்கப் போகிறீர்கள். இன்று இரவு" என சொல்லி இருக்கிறார். இதனால் நிகழ்ச்சியில் யார் காப்பாற்றப்படுவார் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்ட நிலையில், இந்த வாரம் பாவானி ரெட்டி மற்றும் தாமரைச்செல்வி தவிர அனைவரும்காப்பாற்றப்படுவார்கள் என்றும், சின்னப்ப்பொண்ணு வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment