Tamil Biggboss Season 5 Update : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 4 சீசன்களை போல் இல்லாமல் நடப்பு சீசனில் புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், இமான் அண்ணாச்சி, விஜே பிரியங்கா நடிகர் வருண் ஆகியோர் மட்டுமே ரசிகர்கள் மத்தில் பிரபலமான போட்டியாளர்களாக உள்ளனர்.
முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 2-வது வாரத்தை நெருங்கி வரும் நிலையில். போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் சந்தித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது போட்டியாளர் நிரூப் தனது வாழ்வியல் கதையை இன்று சொல்ல உள்ளார்.
இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் பேசும் நிரூப், தனக்கு சினிமாவில் யாருடைய தொடர்பும் இல்லை என்றும், தனக்கு வாழ்க்கை காட்டியதே யாஷிகா தான் என்று கூறியுள்ளார். மேலும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வரும்போது பலரும் யாஷிகாவின் எக்ஸ்பாய்ப்ரண்ட் உள்ளே வருகிறார் என்று கூறினார். ஆனால் இதை நினைத்து நான் பெருமைபடுகிறேன். எனக்கு வாழ்க்கை காட்டியதே யாஷிகாதான் என்று சொல்லும் நிரூப், ஒரு பெண்ணால் ஆண் வளரக்கூடாதா என்று கேட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்த நிரூப், தனது உயரம் மற்றும் நீண்ட தலைமுடி காரணமாக இவர் யார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆராய தொடங்கினர். அதன்பிறகு இவர் நடிகை யாஷிகாவின் நெருங்கிய நண்பர் என்றும், சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் என்று தகவல் வெளியானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த்தாக அவரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil