/tamil-ie/media/media_files/uploads/2021/10/Biggboss-Promo.jpg)
Tamil Biggboss Season 5 Promo : சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்த வந்துவிட்டது பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது அனைவரும் அறிந்த ஒன்று. முதல்நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 போட்டியாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.
இதில் இமான் அண்ணாச்சி, ராஜூ ஜெயமோகன், விஜே பிரியங்கா வருண் உள்ளிட்ட சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சி முடியும்போது புதுமுகங்கள் யார் யார் பிரபலமாக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் இந்நிகழ்ச்சியின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் விஜே பிரியங்கா தனது தலைமுடியை கழட்டிய நிகழ்வு பெரும் வைரலானது. இதனைத் தொடர்ந்து நேற்று போட்டியாளர்கள் தங்களுக்கு அறிமுகம் செய்துகொண்டனர். இதில் அனைவரும் தங்கள் வாழ்கையில் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பேசினர். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடு குறித்து ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ப்ரமோவில் பேசும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் இந்த டைட்டிலை நகைச்சுவை செய்யும் ஒரு காமெடியன் வெல்ல வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு ஒரு போட்டியாளர் அதை சொல்ல வேண்டும்என்று அவசியம் இல்லை என்று சொல்கிறார். அதற்கு இமான் அண்ணாச்சி என்னடா இது சோதனை மேல் சோதனையா இருக்கு என்று சொல்கிறார். அப்போது திருநங்கை போட்டியாளர் கஷ்டப்பட்டதான் முன்னேற முடியும் என்று சொல்கிறார்.
அப்போது போட்டியாளர் நிரூப் இமான் அண்ணாச்சியிடம் நீங்கள் பேசும்போது சிரிச்சது தப்பா என்ற கேட்கிறார். அதற்கு அவர் அதெல்லாம் தப்பு இல்லை என்று சொல்ல அதற்கு சிபி ஏதோ சொல்கிறார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடக்கிறது. இதை பார்க்கும் திருநங்கை ஒருவர் வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது என்று சொல்கிறார். அத்துடன் முடிகிறது இந்த ப்ரமோ. இதன் மூலம் பிக்பாஸ் தொடங்கிய 3-வது நாளிலேயே சண்டை தொடங்கவுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.