Advertisment

Bigg Boss Tamil: அதே ஸ்டைல்... அதே கெத்து... கமல்ஹாசனுக்கு பதிலாக வந்த ரம்யா கிருஷ்ணன்; வீடியோ

Tamil Reality Show : பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil: அதே ஸ்டைல்... அதே கெத்து... கமல்ஹாசனுக்கு பதிலாக வந்த ரம்யா கிருஷ்ணன்; வீடியோ

Tamil Biggboss Season 5 Ramya Krishnan Entry : தமிழில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் கொடுப்பதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. இதில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 100 நாட்கள் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல், வீட்டிற்கு இருக்கும் போட்டியாளர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஏற்படுத்தும்.

Advertisment

கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் 5-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் 50 நாட்களை கடந்துள்ள நிலையில், தொகுப்பாளர் கமல்ஹாசன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு சளி இருமல் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடாந்து தன்னைத் தானே தனிமைபடுத்திக்கொண்ட கமல்ஹாசன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் கமல் மருத்துவமனையில் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியயை நடிகை ரம்யா கிருஷணன் தொகுத்து வழங்க உள்ளார். இது தொடர்பான ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் வீடியோவில் தோன்றும் கமல்ஹாசனுக்கு போட்டியாளர்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள் கூறுகின்றனர். அதன்பிறகு பேசும் கமல், மக்களை நோக்கி மருத்துவமனை டிவியில் இருந்து உங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன்.

நீங்கள் தோய்வில்லாமல் இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்லும்போது ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி கொடுக்கிறார். தற்போது இந்த ப்ரமோ பெரும் வைரலாகி வரும் நிலையில், ராஜமாதாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment