scorecardresearch

பதிலடி கொடுக்க காத்திருக்கும் போட்டியாளர்கள்… சமாளிப்பாரா அண்ணாச்சி?

Tamil Biggboss Update : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி

பதிலடி கொடுக்க காத்திருக்கும் போட்டியாளர்கள்… சமாளிப்பாரா அண்ணாச்சி?

Biggboss Unsean Promo Update : புதுமுகங்கள் பலர் பங்கேற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. தற்போது 23 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், திருநங்கை நமீதா மாரிமுத்து, நாடியாக சங், மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். நாளுக்கு நாள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வரும் இந்நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அன்சீன் ப்ரமோ வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அன்சீன் ப்ரமோவில், இமான் அண்ணாச்சியை பாவனி வம்புக்கு இழுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி.  இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல்தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் பாராட்டை பெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் அனைவரிடமும் வெளிப்படையான பேசி அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார்.

இதில் கடந்த வாரம் அபிஷேக் ராஜா செய்த தவறு என்று சுட்டிக்காட்டிய அண்ணாச்சி, சாப்பாடு செய்துகொடுத்தால், அதை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று பிரியங்கா மற்றும் பாவனி இருவரும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதனால் தான் அடுத்த வாரம் கண்டிப்பாக குக்கிங் அதன்படி நேற்றுமுதல் குக்கிங் டீமில் இருக்கும் அவரிடம், பாவனி”தண்ணி இல்லாத காபி கிடைக்காதா என பாவனி கேட்க, உனக்கு மட்டும் தனியாக தரவா, ஒரு லிட்டர் பாலை காய்ச்சி குடிச்சிருவோம்” என காமெடியாக பதில் சொல்லி இருக்கிறார்.

கடந்த வாரம் முழுவதும் அண்ணாச்சி சொன்ன குறைகளை மீண்டும் அவருக்கே சொல்ல பாவனி பிரியங்கா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் காத்திருக்கும் நிலையில், அண்ணாச்சி தனது கவுண்டர் மூலம் பதிலடி கொடுப்பாரா அல்லது குறைகளை சரி செய்துகொள்வாரா அவர் எப்படி சமாளிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil biggboss season 5 unsean promo update in tamil

Best of Express