/tamil-ie/media/media_files/uploads/2021/10/Priyanka-1.jpg)
Biggboss Priyanka Life Story : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதில் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் பலரும் தங்களது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான கதைகளை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்ச்யில் 9 பேர் மட்டுமே தங்களது கதைகளை கூறியிருந்த நிலையில், தற்போது மீதமிருக்கும் போட்டியாளர்கள் இந்த வாரம் தங்களது கதையை சொல்ல தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் நேற்றைய எபிசோட்டில் தொடக்கத்திலேயே அதிகமான டிஸ்லைக் பெற்ற அக்ஷரா தனது கதையை பகிர்ந்துகொண்டதை தொடர்ந்து, விஜே பிரியங்கா தனது கதையை சொல்ல தொடங்கினார்.
"என்னுடைய அப்பா அம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த காதலுக்கு அடையாளமாக அவர்களுக்கு பிறந்த அழகான குழந்தை நான். மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கை, பெரிதாக ஒன்றும் இல்லை. நான், என்னுடைய தம்பி, அம்மா, அப்பா என நாங்கள் நான்கு பேர் தான் எங்களுக்னெ ஒரு அழகான வீடு நாங்கள் குடும்பமாக நங்கநல்லூர் பகுதியில் வீட்டில் வசித்து வந்தோம்.
எங்கள் அம்மா சாதாரண ஒரு ஹவுஸ் வைஃப் தான். என்னுடைய தம்பி சூப்பராக படித்தான், நான் சுமாராக படித்தேன். என்னுடைய அப்பா எப்போதும் என்னை திட்டியது இல்லை, என்னுடைய தம்பியை காலரை பிடித்து இழுந்து அடித்திருக்கிறார்.அவள் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் வீட்டிலேயே வைத்துக் கொள்வேன் என வீட்டோட மாப்பிள்ளை பார்க்கலாம் என அவர் ஒருநாள் கூறினார். அது அவர்கள் பேசும்போது நான் ஓட்டு கேட்ட விஷயம்.
எனக்கு 11 வயது இருக்கும். ஒருநாள் அப்பா டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு போன் கால் வந்தது, அதில் பேசிய ட்ரெயின் டிடிஆர் அப்பாவுக்கு மூச்சு விட முடியவில்லை என சொன்னார். அம்மா பதறிப் போய் உடனே பெட்ரூமில் வைத்திருந்த நகைகளை பையில் போட்டுக் கொண்டு தம்பியை கூட்டிக்கொண்டு வேகமாக கிளம்பினார். என்னை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டார். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து எனக்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசிய என் அப்பா, அம்மா கிளம்பிட்டாங்களா என கேட்டார். கிளம்பிட்டாங்க என்ன ஆச்சு அப்பா என நான் கேட்டேன், ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. என்னை பத்திரமாக இரு என்று சொன்னார். இதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. திடீரென என் பெரியம்மா வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போனார். காலையில் ரெடியாகி சாப்பிட்ட பிறகு அப்பா இறந்துவிட்டார் என அவர் என்னிடம் விஷயத்தை சொன்னார். அதை கேட்டு நான் உறைந்து போனேன்.
எனக்கு அவர் தான் எல்லாமே. எங்க அப்பாவுக்கு 36 வயசு, அம்மாவுக்கு 34 வயது. அப்பா எங்களுக்கு எந்த கடனும் வைக்கவில்லை, தொல்லையும் இல்லை. நான் தற்போது ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன் யாராவது துயரத்தில் இருக்கிறார்கள் என்றால் அருகில் சென்று உதவ பாருங்கள். என்னுடைய அப்பா டிரெனில் இருந்து இறங்க வேண்டும். அம்மா ஸ்ட்ரெச்சர் உடன் அங்கு சென்று இருக்கிறார்.
ஆனால் அந்த வழியாக ஒரு நபர் கூட இறங்கவில்லை, ஒரு சிறுவன் ஸ்ட்ரெச்சருடன் சென்றுள்ளான். ஆனால் அவனும் வெளியிலேயே நின்றுவிட்டான். என்னுடைய அம்மாதான் தனியாக அப்பாவை கையால் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்து ஹாஸ்பிடல் கொண்டு சென்றிருக்கிறார். அந்தக் கதை அம்மா சொல்ல கேட்ட பிறகு தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. யாராவது வந்து அந்த நேரத்தில் உதவி இருந்தால் ஒருவேளை என்னுடைய அப்பா உயிரை காப்பாற்றி இருக்கலாம் என தோன்றுகிறது. யாராவது கஷ்டத்தில் இருந்தால் சென்று உதவ வேண்டும் என்பது அது.
நான் எவ்வளவு சம்பாதித்தாலும் என்னுடைய அம்மாவிடம் தான் கொண்டு சென்று கொடுப்பேன். அவரிடம் இருந்து காசு வாங்குவது தனி சுகம் தான். அப்பா இறந்த போது கிடைத்த பணத்தை வங்கியில் போட்டு அதன் வட்டியை கொண்டு தான் எங்களை வளர்த்தார் அம்மா. நான் தற்போது என்னவாக இருந்தாலும் அதற்க்கு ஒரே காரணம் என்னுடைய அம்மா மட்டும் தான். மீடியாவுக்கு வரும்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு குறிக்கோள் என ஒன்று கிடையவே கிடையாது. எனக்கு இந்த தொகுப்பாளர் வேலை பிடிக்கும் அதனால் அதை செய்து கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என தெரியாது. என்னுடைய ஒரே குறிக்கோள் என்னுடைய அம்மா. எனக்காக எவ்வளவு தியாகங்கள் செய்து இருக்கிறார், அதற்கு கைமாறாக நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் பிக் பாஸ் போகிறேன் என சொன்னபோது பலரும் வேண்டாம் என கூறினார்கள். உங்க பெயரை கெடுத்து விடுவார்கள், விஜய் டிவி உங்களை நாறடித்து விடும் என சொன்னார்கள். ஆனால் நான் இத்தனை வருஷம் வேலை செய்து இருக்கிறேன், அப்படி செய்ய மாட்டார்கள். ஒரு இடத்தில் உங்களால் பாசிட்டிவாக வைத்துக் கொள்ள முடியும் என்றால் உங்களால் முடியும். அது என்னால் முடியும் என கூறினார் பிரியங்கா.
அதன்பிறகு இந்த வீட்டில் என்னை பிடித்த அனைவருக்கும் என்னால் முடிந்த அன்பை கொடுப்பேன். என்னை பிடிக்காதவர்களுக்கும் கடுமையான உழைத்து முயற்சி செய்து என்னை உங்களுக்குபிடிக்கும்படி செய்வேன் உங்களுக்கும் அதிகளவு அன்மை நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு பிரியங்காவுக்கு ராஜு உட்பட சிலர் டிஸ்லைக் கொடுத்தனர். மீடியாவில் பெரிய ஆளாக இருக்கும் நீங்களே உங்களுக்கு குறிக்கோள் இல்லை என்று சொல்லாதீர்கள், நீங்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷன் என அபிஷேக் ராஜா கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.