பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன்னை குறித்து கருத்து தெரிவித்த வனிதாவுக்கு ராபர்ட் மாஸ்டர் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சி தற்போது 53 நாட்களை கடந்துள்ளது. இதில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது 7 பேர் வெளியேற்றப்பட்டு 14 பேர் வீட்டிற்குள் உள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ரக்ஷிதா, அமுதவாணன், ஜி.பி.முத்து ராபர்ட் மாஸ்டர் என சில முகங்களே ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமாக முகங்களாக உள்ளனர். இதில் சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குனராக வந்த ராபர்ட் மஸ்டர் இடையில் சில ஆண்கள் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
தொடர்ந்து சமீபத்தில் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி ஆன அவருக்கு தற்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் முன்னாள் பிக்பாஸ் பிரபலமாக வனிதா விஜயகுமார் ராபர்ஸ்ட் மாஸ்டரின் முன்னாள் காதலி என்றும், இவர்கள் காதலிக்கும்போது ராபர்ட் வனிதாவின் பெயரை தனது கையில் டாட்டூவாக வரைந்திருந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராபர்ட் நடிகை ரக்ஷிதாவை காதலிப்பதுபோல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தினார். இதனால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கை குறித்து வனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
மேலும் ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான்தான் என்றும், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறியுள்ள அவர், அங்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
தற்போது பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ள ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் வனிதாவுக்கு போன் செய்தது உண்மைதான் இரண்டுமுறை இந்நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் என்பதால் அவரிடம் நிகழ்ச்சி குறித்து பேசினேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பது எனது ஆசை. இந்தியின் அனைத்து சீசன்களையும் பார்த்துள்ளேன். ஆனால் வனிதா எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்பது பொய்.
மேலும் ரக்ஷிதாவிடம் நடந்துகொள்வதை பார்த்து திருமணமாகி மகள் இருக்கும் நிலையில் இப்படி நடந்துகொள்ளலாமா என்று விமர்சனம் செய்த வனிதாவுக்கு பதில் கொடுத்துள்ள ராபர்ட் மாஸ்டர், திருமணமாகி இப்படி நடந்துகொள்வது அசிங்கமாக இருக்கிறதா என்று இவர் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது இவரைப்பற்றி எல்லாம்தான் தெரியுமே என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil