Advertisment

Bigg Boss Tamil: நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த போட்டியாளர்கள்; ஃபைனல் லிஸ்ட் இதுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் இருந்து டிஸ்னி + ஹட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்க்கலாம் என்று ப்ரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Oct 07, 2022 18:42 IST
Bigg Boss Tamil: நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த போட்டியாளர்கள்; ஃபைனல் லிஸ்ட் இதுதானா?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரும் ஞாயிறு (அக்டோபர் 09) அன்று தொடங்க உள்ள நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் சென்னை நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 9-ந் தேதி (நாளை மறுநாள்) பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்க உள்ளது.

சண்டை சச்சரவுகள், மோதல்கள் என கலவரமாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் 20-க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மக்களிடம் பிரபலம் இல்லாத ஒரு சிலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த சீசன்கள் விஜய் டிவியில் ஒரு மணி நேரம் மட்டுமே டெலிகாஸ்ட் ஆகி வந்த நிலையில், இந்த சீசனில் இருந்து டிஸ்னி + ஹட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்க்கலாம் என்று ப்ரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களுக்கு சென்னை நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் தனிமைப்படுத்துதல் தொடங்கியுள்ளது.

இந்த பங்கேற்பாளர்கள் பட்டியலில், சென்னையை சேர்ந்த மாடல் ஷெரினா, இலங்கையை சேர்ந்த வி.ஜே ஜனனி, மலேசியாவை சேர்ந்த ஏ,டி.கே உள்ளிட்டோர் முக்கிய போட்டியாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஏன் என்ற காரணத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிடலாம் அதில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று விஜய் டிவி அறிவித்திருந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆயிரக்கணக்கான நபர்கள் தங்கள் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த காரணத்தை பதிவு செய்து அனுப்பியதாகவும் அதில் இருந்து சில நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment