பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் கணவர் நடிகர் தினேஷ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. விஜய் டிவியின் தினமும் இரவு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி டிஸ்னி+ஹாஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக முதல் நாளில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்ப எழுந்துள்ளது. அதேபோல் பங்கேற்றுள்ள 20 போட்டியாளர்களில், ஜி.பி.முத்து, ஆயிஷா அமுதவாணன், மற்றும் ரக்ஷிதாஉள்ளிட்ட சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியியில் சற்று பிரபலமானவர்களாக உள்ளனர்
இதில் ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி, தொடர்ந்து ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2’, ‘அம்மன் 1 & 2’, ‘இது சொல்ல மறந்த கதை’, உள்ளிட்ட சில தொடர்களிலும், ‘உப்பு கருவாடு’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா மகாலட்சுமி, தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.
இந்த தொடரின் அவருடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழந்து வருகின்றனர். இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் என்ட்ரி ஆகியுள்ள ரக்ஷிதா நடிகர் தினேஷ், பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அதே சமயம் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் தினேஷ், தவறான புரிதல்களை நேரம் சரி செய்யும் என்றும் மீண்டும் நாங்கள் இணைவோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் தனது இன்ஸ்டாகிராமில் “வாழ்த்துக்கள் மற்றும் ‘பிக் பாஸ் 6’ இல் நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்… என்று ரக்ஷிதாவின் படத்தை பதிவிட்டு கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil