தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. சமூக ஊடக உணர்வுகள் முதல் ஒரு நடனக் கலைஞர் வரை, தற்போது 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே இந்த சீசனில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் வாரத்திற்கு என்ன சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கூல் சுரேஷ்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ், 2001-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பல் வெளியான"சாக்லேட்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள் இவருக்கு வாரத்திற்கு ரூ. 1.30 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
பூர்ணிமா
ஒரு பிரபலமான சமூக ஊடக செல்வாக்கு மற்றும் நடிகையான இவர் டப் ஸ்மாஷ் செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வாரத்திற்கு ரூ.1 லட்சம் சம்பளம் பெருகிறார்.
ரவீனா தாஹா
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகங்களில் ஒருவரான ரவீனா தாஹா வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் முத்திரை பதித்தவர். தமிழில் ராட்சசன் திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்திற்கு ரூ.1.80 லட்சம் சம்பளம் பெருகிறார்.
பிரதீப் ஆண்டனி
அருவி, தாதா, வாழ்வு போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் முன்னாள் போட்டியாளரும் நடிகருமான கவின் நெருங்கிய நண்பராக இவர், வாரத்திற்கு 1.50 முதல் 2 லட்சம் வரை சம்பளம் பெருகிறார்.
விஷ்ணு,
‘கனா காணும் காலங்கள், ஆபீஸ், சத்யா சீசன் 1,2, இது சொல்ல மறந்த கதை’ போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு, வாரத்திற்கு 2 முதல் 2.50 லட்சம் வரை சம்பளம் பெருகிறார்.
பாவா செல்லதுரை
ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் நடிகரான பாவா செல்லதுரை, எல்லா நாளும் கார்த்திகை, முதல் 19 டிஎம் சரோன், பஷிரின் அறை அத்தனை எழிலில் திறக்கபடவில்லை போன்ற பிரபலமான புத்தகங்களை எழுதியவர். மேலும் 'ஜோக்கர்', 'ஜெய் பீம்', 'குடிமகன்', 'சைக்கோ' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வாரத்திற்கு 1 முதல் 3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
யுகேந்திரன் வாசுதேவன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் பின்னணி பாடகருமான மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன். தமிழில் நடிகர் அஜித்துடன் இணைந்து பூவெல்லாம் உன் வாசம் படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வாரத்திற்கு சுமார் ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார்.
ஜோவிகா விஜய்குமார்
பிரபல தமிழ் நடிகையும் முன்னாள் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜய்குமார். வாரத்திற்கு ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.