Advertisment

'தமிழ் எழுதி காண்பிடி பார்ப்போம்': ஜோவிகாவை டார்கெட் செய்த விசித்ரா

வனிதாவின் மகள் ஜோவிகா தான் 9-ம் வகுப்பு படித்தபோது படிப்பு வரவில்லை என்பதால் நின்றுவிட்டேன் என்று சொல்ல, ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் அட்வைஸ் செய்தனர்

author-image
WebDesk
New Update
Biggboss Jovika

பிக்பாஸ் ஜோவிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில, வனிதா மகள் ஜோவிகாவுக்கும் நடிகை விசித்ராவுக்கு இடையான மோதல் குறித்த ப்ரமோ வைரலாகி வருகிறது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்றுள்ள நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா தான் 9-ம் வகுப்பு படித்தபோது படிப்பு வரவில்லை என்பதால் நின்றுவிட்டேன் என்று சொல்ல, ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் ஏன் படிப்பை நிறுத்திவிட்டாய் என்று அட்வைஸ் செய்ய தொடங்கினர். இதில் நடிகை விசித்ரா என்ற கஷ்டமாக இருந்தாலும் பேசிக் கல்வி 12-ம் வகுப்பு வரை படித்துவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

அவர் சொல்லும்போது ஜோவிகா அதை கண்டுகொள்ளாத நிலையில், இதுவே இப்போது பெரிய விஸ்வரூபமாக மாறியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் முதலில் பேசும், விசித்ரா, ஜோவிகாவின் பள்ளி விஷயத்தின் நான் தலையிடவே இல்லை. அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியம் என்று தான் சொல்ல வந்தேன் என்று சொல்கிறார். அதற்கு ஜோவிகா எல்லோரும் படித்துதான் பெரிய ஆளாக வர வேண்டும் என்று அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜோவிகா பேசிக்கொண்டே இருந்த நிலையில், விசித்ரா எதை வேண்டுமென்றாலும் பேசுவதற்கு பெயர் பேச்சு சுதந்திரம் கிடையாது என்று சொல்ல, போட்டியாளர்கள் பலர் ஜோவிகாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரமோவில் விசித்ரா ஆவேசமான ஜோவிகாவிடம், எங்க தமிழில் எழுதி காண்பிடி பார்ப்போம் என்று சொல்கிறார்.

அதற்கு ஜோவிகா நான் தமிழ் படிக்கவில்லை. எனக்கு படிப்பு வரவில்லை என்றுதான் நிப்பாட்டினேன். நான் கஷ்டப்பட்டேன். ஒரு விஷயத்தை செய்யும்போது தவறான எணம் வருகிறது நீ மோசமாகிராய் என்றால் தயவு செய்து அந்த விஷயத்தை செய்யாதே படித்துதான் வாழ வேண்டும் என்று கிடையாது. அப்படி யாரும் சொல்லவில்லை என்று சொல்ல உடனே ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் ஜோவிகாவுக்கு ஆதரவாக கைதட்டினர். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment