Tamil Biggboss Season 5 Udate In tamil : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தனது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், தற்போது 7 பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர் மற்றவர்கள் குறைவான ஓட்டு வாங்கியதால் வெளியேற்றப்பட்டது அனைவரும் அறிந்தததே. தற்போது இந்நிகழ்ச்சியில கடைசி வார ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த எபிசோட்டுடன் பிக்பாஸ் சீசன் 5 முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில், நேற்றைய எபிசோட்டில் டிக்கெட் டூ பினாலே சுற்றில் வற்றி பெற்ற நிரூப் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டார். ஏற்கனவே வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர் முதல் ஆளாக இறுதிச்சுட்டுக்கு முன்னேறிவிட்டார். தற்போது நிரூப்பும் முன்னேறிவிட்டதால், மீதமுள்ள பிரியங்கா, ராஜூ, பாவனி,தாமரை ஆகிய 4 பேரில் யார் வெளியேற்றப்படுவார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.
மேலும் இந்த வார எலிமினேஷனுக்காக நாமினேஷன் பட்டடியலில் 4 பேருமே இடம்பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்கு வாங்கிய தாமரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமபுற பகுதியை சேர்ந்த தாமரை ஒரு நாட்டுப்புற கலைஞராவார். திருமணத்திற்கு பின் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வரும் தாமரை ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
நாட்டுப்புற கலைஞராக பி்க்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த தாமரை தொடக்கத்தில் எதுவும் தெரியாமல், வெள்ளந்தியாக இருந்து வந்தார். அப்போது நிகழ்ச்சியின் நுனுக்கங்களை சகபோட்டியாளர்களிடம் கேட்டு தெரிந்துகொணட அவர், அதன்பிறகு மற்றவர்களை விடவும் சரியான முறையில் விளையாடி தொகுப்பாளர் கமல்ஹாசனிடமே பாராட்டுக்களை பெற்றார். தொடர்ந்து கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு இவர் பிரிங்காவுடன் அடிதடி சண்டையில ஈடுபட்டது பெரும் வைரலாக பரவியது.
இவரின் வெள்ளந்தி குணத்திற்காகவே இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் எகிறியது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், கடந்த வாரத்தில், 12 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சிபி வழங்கிய சந்தர்ப்பத்தையும் மறுத்துவிட்டர். எப்படியும் இறுதிச்சுற்றில் பஙகேற்போம் என்ற நம்பிக்கையில் இருந்த தாமரைக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆனாலும் தன்னம்பிக்கையுடன் 90 நாட்களை இவர் கடந்ததே பெரிய விஷயம்தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil