scorecardresearch

கெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல!

Tamil Reality Show : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான நண்பர்களை பெற்றுள்ள தாமரை தற்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்

கெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல!

Biggboss Thamari New Getup Video Viral On Social Media : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதவரை 5 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பலர் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று திரைத்துறையில் படவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோர் 3-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்றவர் தாமரை. 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராஜூ ஜெயமோகன் பிக்பாட்டம் பட்டம் பெற்றிருந்தாலும் தனது தனித்தன்மையான செயல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தாமரை.

மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன் குடும்பம் மட்டுமல்லாது அம்மா சகோதரி என அனைவரையும் கவனித்து வருவர்தான் தாமரை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமாக கஷ்டத்த அனுபவித்து வந்த தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றே சொல்லாம்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து அடுத்து தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும தாமரை பங்கெற்றார். பிக்பாஸ் போன்றே அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரை இறுதிகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான நண்பர்களை பெற்றுள்ள தாமரை தற்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2-வில் தனது கணவருடன் பங்கேற்றுள்ள தாமரை இதுவரை சேலையில் தோன்றிய நிலையில, தற்போது தனது சக பிக்பாஸ் நண்பர் ஐக்கி பெர்ரியுடன் இணைந்து பேண்ட் ஷர்ட் அணிந்து ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தாமரையா இது என பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவின் இறுதியில் ஐக்கி பெர்ரி தாமரைக்கு கிஸ் கொடுப்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil biggboss thamari new getup and viral dance with ikki berry

Best of Express