Tamil Biggboss Winner Raju Meet Direct Bhagyaraj and Nelson : விஜய் டிவியின் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், சாம்பியன் பட்டம் வென்ற ராஜூ ஜெயமோகன் தனது குருநாதர் பாக்யராஜூவிடம் சாம்பியன் கேடயத்தை கொடுத்து ஆசி பெற்ற புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தநிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. பல புதுமுகங்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் நடிகர் என பரவலாக அறியப்பட்ட ராஜூ ஜெயமோகன் சாம்பியன் பட்டம் பெற்றார்.
தமிழகத்தின் தென் பகுதியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜூ, இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பல குறும்படங்களை இயக்கியர். தொடர்ச் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்த இவர், பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இயக்குநர் பாக்யராஜூவிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளராக பணியாற்றிய அவர், சீரியலிலும் நடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியின் ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கத்தி என்ற ரோலில் நடித்து வரும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால், கத்தி கேரக்டர் வெளிநாடு சென்றுவிட்டது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு பாரதி கண்ணம்மா சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களிலும், நட்புன்னான என்னானு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 5 சாம்பியனான இவர், தனது எளிமையான பேச்சின் மூலம் பலரின் மனங்களை வென்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவரைப்பற்றி சர்ச்சையாக கருத்துக்களை எதுவும் வெளியாகாதது இவரின் இமேஜை மேலும் உயர்த்தியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் பட்டம் வென்ற இவருக்கு, சினிமாவில் இயக்குநர் வாய்ப்பு கதவை தட்டிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்திப்பில், முன்றேற்த்திற்கான வாய்ப்புகள் வருவதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் ராஜூ இனிமேல் சீரியலில் நடிக்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டருக்காகவே ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது ராஜூவின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் சாம்பியன் ராஜூ பிக்பாஸ் கேடயத்துடன் தனது குருநாதர் பாக்யராஜூவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் மற்றும் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சனிடமும் பிக்பாஸ் சாம்பியன் ஷிப்பை காண்பித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜூ, தனக்கு இயக்கம் கற்றுக்கொடுத்த ஒருநாதர்களில் நெல்சனும் ஒருவர் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சனை சந்தித்து பிக்பாஸ் வெற்றி குறித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பீஸ்ட் படத்தின் அப்டேட் கிடைக்காமல் தவித்து வரும் விஜய் ரசிகர்கள், ராஜூவிடம் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “