Biggboss Ultimate show Update : விஜய் டிவியின் பிக்பாஷ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்நிகழ்ச்சியில், 5-வது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. அதனைத் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒடிடி டிஸ்னி+ஹாடஸ்டாரில் ஒளிபரப்பாகும் வகையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசனிகளில் பங்கேற்ற சில போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் என்றாலே சண்டை சச்சரவுகளில் மறு உருவம் என்று கூறப்படும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதைவிடஒருபடி மேலே சென்று போர்களமாக மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது இந்நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் இருந்து இதுவரை, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, ஆகியோர் தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டனர். அடுத்து நிகழ்ச்சியில் முக்கிய புள்ளியாக அனைவருடனும் மோதல்போக்கை கடைபிடித்த வனிதா சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தி கேபிஒய் சதீஷ் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியை தெகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது கோழி முட்டை டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வரும் நிலையில், நிரூப், ஜூலியை அசிங்கமாக திட்டும் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஜூலி அனிதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் நிரூப், ஜூலியை பார்த்து பொய் பேசுவாள் என்று சொல்ல, உடனே ஜூலி நிரூப்பிடம் வாக்குவாதம் செய்கிறாள். இதனால் கோபமடையும் நிரூப், ஜூலியை அசிங்கமான வார்த்தையை பேசி திட்டிவிடுகிறார். இதை கேட்டு கோபமாகும் ஜூலி நிரூபிடம் வாக்குவாதம் செய்து அவனை எச்சரிக்கிறாள். இது தொடர்பாக காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன்பிறகு என்ன நடக்கும், தொகுப்பாளர் சிம்பு இதற்கு என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஜூலி நிரூப் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில். இவர்களுக்கு இடையே அவ்வப்போது ஆபாச வார்த்தை மோதலும் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை ஜூலி குறித்து நிரூப் பேசியது தவறு என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil