Biggboss Vanitha Vijayakumar Update : வெளியில் எலி வீட்டுக்குள் புலி என்பது போல பிக்பாஸ அல்டிமேட் நிகழ்ச்சியில் அடக்கி வாசித்த நடிகை வனிதா விஜயகுமார்,தற்போது வீட்டிற்குள் நுழைந்ததது தனது வழக்கமான முகத்தை காட்ட தொடங்கியுள்ளது சக போட்டியாளர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் சமீபத்தில் 5-வது சீசனின் இறுதி விழாவில், பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும், டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் வீ்ட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
இவரின் அலப்பறைகளை பார்த்த பிக்பாஸ் குழுவினர் இன்னும் மேலே செல்லுங்கள் அப்போதான் இன்ஸ்ட்ரஸ்டிங்கா இருக்கும் என்பது போல அவரைவே வலைத்து வலைத்து காட்சிபடுத்தியுள்ளனர். இதில் தற்போது கேப்டனாக உள்ள ஷாரிங் வனிதாவின் செயலால் பொறுமையை இந்து நிற்கிறார். காபி வேண்டும் என்று அடம் பிடிப்பது, சக போட்டியாளர்களிடம் மட்டும் இல்லாமல் பிக்பாஸிடமே தேவைகளை கேட்டு அடம் பிடிப்பது என வனிதாவின் செயல்கள் சக போட்டியாளர்களுடன் ரசிகர்களையும் வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் செயலுக்கு சக போட்டியாளர்கள் கேள்வி கேட்டாலும், அவர்களிடம் பதிலுக்கு கேள்வி கேட்டு அமர வைத்துவிடுகிறார். மேலும் தனக்கு காபி இல்லை என்றால் யாருக்கும் காபி இல்லை என்று கூறி டீ தூள் பாக்கெட்டுகளை அவர் ஒளித்து வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பமே இப்படி அமக்களமாக இருந்தால் மீதமிருக்கும் நாட்கள் எப்படி இருக்கும் என்று யோசித்த போட்டியாளாகள் அவரை நாமினேட் செய்துள்ளனர். 3-வது சீசனில் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் அளவுக்கு நல்ல பெயர் வாங்கிய வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வரப்போகிறார் என்றதுமே ரசிகர்கள் குஷியானார்கள் ஆனால் இப்போது அவர்களின் என்னம் தலைகீழாக மாறியுள்ளது. இதனால் அவருக்கு ரசிகர்கள் ஓட்டு போடாத நிலையில், டேஞ்சர் ஜோனில் உள்ளார். ஆனாலும் அதகளம் பண்ணும் அவ்வளவு எளிதில் வெளியேற மாட்டார் என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil