Advertisment

கட்டிப்பிடித்த விசித்ரா... தினேஷ் கொடுத்த ரியாக்ஷன் : கேமரா இருப்பதை மறந்து விட்டாரோ!

முதல் வாரத்தில் ஜோவிகாவுடன் சண்டை வந்தபோது விசித்ரா படிப்பு குறித்து நல்லதை தான் சொன்னார் என்று அவருக்கு ஆதரவு பெருகியது.

author-image
WebDesk
New Update
Dinesh Vichithra

விசித்ரா - தினேஷ் நடனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என சமமாக பெற்று வரும் நடிகை விசித்ரா தற்போது டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் செய்த செயல் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. தற்போதுவரை 60 நாட்களை கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த சீசன்களில் வயது அதிகமான போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இந்த சீசனில் விசித்ரா தனது நடுநிலையின் மூலம் 60 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.

இதில் முதல் வாரத்தில் ஜோவிகாவுடன் சண்டை வந்தபோது விசித்ரா படிப்பு குறித்து நல்லதை தான் சொன்னார் என்று அவருக்கு ஆதரவு பெருகிறது. அதேபோல் வைல்ட் கார் என்டரியாக வந்த அர்ச்சனாவுக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு ஆதரவாக மாயா மற்றும் பூர்ணிமாவிடம் மோதலில் ஈடுபட்டது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதேபோல் பிரதீப் ரெட் கார்டு விஷயத்தில் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் பிக்பாஸ் கொடுத்த பூகம்பம் டாஸ்கின்போது, மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்த விசித்ரா அர்ச்சனாவிடம் பேசாத நிலையில், அர்ச்சனா மற்ற போட்டியாளர்களிடம் விசித்ரா குறித்து பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்து விளையாடி வருகின்றனர். இதனிடையே தற்போது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா நீலாம்பரியாவும், தினேஷ் படையப்பாவாகவும் இருக்கின்றனர்.

படையப்பா படததில் வரும் மின்சார கண்ணா என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடிக்கொண்டிருந்தபோது இறுதியில், நீலாம்பரி படையப்பாவை கட்டிபிடிப்பது போல் விசித்ரா தினேஷை கட்டிபிடித்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விசித்ரா கேமரா இருப்பதை மறந்து இப்படி செய்துவிட்டாரா என்று கேட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு மன்பு கூல் சுரேஷ் கயிறால் கட்டப்பட்டு பெட்டில் படுத்திருந்தபோது, அருகில் இருந்த விசித்ரா, இவர் இப்படி படுத்திருக்கிறார். நான் இவரது பக்கத்தில் உட்கார்ந்தால் இதை பார்க்கும் என் கணவர் என்ன நினைப்பார் இது அசிங்கமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் பாடலுக்கு நடனமாடியவுடன் படத்தில் வருவது போல் தினேஷை கட்டிபிடித்துள்ளார். திரையுலகிற்கு வந்த புதிதில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தாலும் இப்போது அந்த மாதிரி நடிக்கவில்லை என்று கூறியிருந்த விசித்ரா, தினேஷை கட்டிப்பிடித்ததை உங்கள் கணவர் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் பார்க்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்தாலும், தினேஷ் விசித்ரா நடனத்தை பாராட்டியும் வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment