விஜய் டிவியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதை தொடர்ந்து 2-ம் பாகம் தொடங்கப்பட்டது.முதல் சீசனில் நாயகியாக நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலில் சந்தியா என்ற நாயகி கேரக்டரில் நடிகர் சித்து சரவணன் என்ற கேரக்டரில் நடித்து வந்தனர்.
இந்த சீரியலில் அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரிலில் நடித்து வந்தவர் நடிகை வி.ஜே.அர்ச்சனா. சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் தான் அறிமுகம். சிறப்பாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார். தனது விலகல் குறித்து அர்ச்சனா எவ்வித காரணமும் சொல்லவில்லை.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அர்ச்சனா இறுதியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இவர் பிக்பாஸ் சாம்பியன் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இவர் சாம்பியன் ஆக சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வழக்கம். அதே சமயம் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்த நடிகர் அருண் பிரசாத் – அர்ச்சனா இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் இந்த செய்த வதந்தியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
தற்போது அருண்பிரசாத் – அர்ச்சனா காதலை உறுதி செய்யும் வகையில் அர்ச்சனா தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் வேறு எந்த சீரியல்களிலும் நடிக்காத அருண்பிரசாத், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் போட்டோஷூட் எடுத்த வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், நடிகை அர்ச்சனா, தேங்கஸ் ஃபார் ஷூட்டிங் மை ஹீரோ என்று கமெண்ட் கொடுத்துள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையெ காதல் இருப்பது உறுதியாகியுள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“