அன்று அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என்று யாரும் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாலை தனது இளம் வயதில் பேசியதாக ஒரு வீடியோ கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க.வை விட பா.ஜ.க கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. இதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் பலரின் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்.
அன்று இந்த அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என்று சன் டிவியும் சரி, திமுக கொத்தடிமைகளும் சரி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!! 🙏🙏🙏 pic.twitter.com/OIhns5Z8Hb
— Netrikan Tv🚩 (@netrikantv) January 17, 2023
இதன் காரணமாக தி.மு.க – பா.ஜ.க இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அண்ணாமலை தொடர்பாக பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர் பதிவில் வெளியாகியுள்ள வீடியோ பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் வெற்றி விழாவில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ பதிவில் ஒரு இளைஞர் ரஜினிகாந்த் பற்றி பெருமையாக பேசியுள்ளார். இந்த வீடியோ அன்று இந்த அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என்று சன் டிவியும் சரி, திமுக கொத்தடிமைகளும் சரி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!! என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு உண்மையானதாக என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
படையப்பா வெள்ளி விழாவில்
— R.Raja Gopal (@RRajaGopalRRS) July 31, 2020
கர்ஜித்த அந்த சிறுவனின்
பெயர் மணிகண்டன்
அவர் பின்னர்
அரசியல் விமர்சகராகி தற்பொழுது Jeya + Channelல்
நெறியாளராக செயல்படுகிறார்
அவர் பெயர் பெருமாள் மணி pic.twitter.com/4TnVkitfFd
மேலும் இந்த வீடியோ பதிவு சன்டிவி லோகோ மற்றும் ஒன்லிசூப்பர்ஸ்டார்.கம் என்ற இணையதள வாட்டர்மார்க்குடன் வெளியாகியாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த வீடியோவில் பேசியது அண்ணாமலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் பேசும் இளைஞர் பெயர் மணிகண்டன் என்றும், அவர் தற்போது பெருமாள் மணி என்ற பெயரில் பத்திரிக்கையாளராக இருக்கிறார் என்றும் தெரியவந்தது.
🎉பிறந்த நாள் நல் வாழ்த்துகள் 🎂தலைவரே💚 என்றுமே ராஜா நீ💪🏼 ரஜினி⭐️ pic.twitter.com/34PoBrzmRi
— Ariyakulam Perumal Mani (@aperumalmani) December 12, 2021
மறைந்த நடிகரும் இயக்குனருமான விசு நடத்தி வந்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் இவரின் பேச்சு பெரிய அளவில் பேசப்பட்டதால் இவரை படையப்பா படத்தின் வெற்றி விழா மேடைக்கு அழைத்து ரஜினிகாந்த் கவுரவித்தார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரஜினி பிறந்த நாள் அன்று, வாழ்த்து தெரிவித்த பத்திரிக்கையாளர் பெருமாள் மணி, அந்த பதிவில், அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் தான் பேசியதற்காக வெளியிட்டிருந்த பத்திரிக்கை செய்திகளை பகிர்ந்திருந்தார். இந்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“