பிக் பாஸ் அமீர் கனவே இதுதானாம்... கையில் அந்த டாட்டூவை கவனிச்சீங்களா!
Tamil Biggboss Update : தன்னை விட வயதில் மூத்தவரும் திருமணமாகி கணவரை இழநதவருமான பாவனியை காதலிக்கிறேன் என்ற பெயரில்,அவர் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறார் அமீர்
Tamil Biggboss Update : தன்னை விட வயதில் மூத்தவரும் திருமணமாகி கணவரை இழநதவருமான பாவனியை காதலிக்கிறேன் என்ற பெயரில்,அவர் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறார் அமீர்
Vijay TV Biggboss Contestant Ameer Update : விஜய் டிவியில் வரும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தயில் பெரிய வரவேற்பை பெற்று வரும் முக்கிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
Advertisment
ன் 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக ஏராளமான புதுமுகங்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 78 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற 18 போட்டியாளர்களில் 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 பேருடன் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த சஞ்சீவ் மற்றும் அமீருடன் சேர்ந்து 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் நடிகர் சஞ்சீவ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக உள்ளார். ஆனால் மறுபுறம் அமீர் பலரும் அறிந்திராத ஒரு முகம். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலையாக இருந்து நல்ல பெயர் வாங்கி வந்தார். ஆனால் தற்போது அவரின் செயல், அவரது பெயரை டேமேஜ் செய்யும் விதமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் பாவனியிடம் இவர் நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
தன்னை விட வயதில் மூத்தவரும் திருமணமாகி கணவரை இழநதவருமான பாவனியை காதலிக்கிறேன் என்ற பெயரில்,அவர் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் அமீர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று சொல்லி அவருக்கு முத்தம் கொடுத்தது பெரும் வைரலாக பரவியது. அன்றிலிருந்து அமீரின் பெயர் பெரிய டேமேஜ் ஆகிவிட்டது
Advertisment
Advertisements
அமீரை அவாய்ட் செய்யும் நோக்கில் பாவனி என்னதான் தம்பி தம்பி என்ற சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை. இப்படியேல்லாம் செய்கிறாரே அமீர், இவர் கேரக்டரே இப்படித்தானா என்று ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. அமீருக்கு ஒரு வயது இருக்கும்போதே அவரது அப்பாவும், 10-ம் வகுப்பு படிக்கும்போது அவரது அம்மாவும் இறந்துவிட, அமீர் சிறுவயதில் இருந்தே ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். யாருடைய ஆதரவும் இல்லாமல் வளர்ந்த அவருக்கு, சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசையமாம்.
இதற்காக ஊட்டில் ராணுவம் தொடர்பான படிப்பினை தேர்வு செய்து படித்துள்ளார். மேலும் ராணுவ பணிக்காக உறுதியுடன் இருந்த அமீர் தனது கையில் இந்தியாவில் தேசிய கொடியை டாட்டூவாக வரைந்துள்ளார். ஆனாலும் ராணுவத்தில் நேர முடியாத அவர், இன்று வரை எவ்வத கெட்ட பழக்கங்களும் இல்லாமல், இயல்பாகவே ஒரு ராணுவ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம். அப்படி இருந்துகொண்டு பி்க்பாஸ் வீட்டில் ஏன் இ்ப்படி நடந்துகொள்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil