/indian-express-tamil/media/media_files/2025/10/05/biggboss-9th-2025-10-05-07-52-17.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள சின்னத்திரை மற்றும் சமூகவலைதள பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் அவர் விலகியதால், அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். 8-வது சீசன் வெற்றிகரகமாக முடிந்த நிலையில், 9-வது சீசன் இன்று (அக்டோபர் 5) தொடங்க உள்ளது.
எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கி அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை சரியாக செய்து, தங்களின் உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சண்டை, காதல், கண்ணீர், வருத்தம், கொண்டாட்டம், என அனைத்தும் கலந்த கமர்ஷியல் நிகழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக இதில் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் மோதல் ரசிகர்கள் மத்தியில், ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். இதில் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருவார்கள்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், பல பிரபலங்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில், தற்போது தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில், சமூகவலைதளங்களில் பிரபலமான கொங்கு மஞ்சுநாதன், நடிகர் இர்பான், ஆரோனா, சீரியல் நடிகை ரம்யா ஜோ, டான்சர் மாலினி ஜீவரத்தினம், சீரியல் நடிகர் சபரிநாதன், ரோஷன், நடிகை கெமி, நடிகர் வினோத் பாபு, மணிகண்டன் இயக்குநர் பிரவீன் காந்தி, சீரியல் நடிகர் கம்ருதீன், வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
#BiggBossTamil9 Contestants List !!#VikkalsVikram#AuroraSinClair#KaniThiru#Diwagar#VJParvathy#VJShobana#Kamrudin#PraveenRajDevasagayam#MaliniJeevarathnam#SabariNathan#Viyana#PraveenGandhi#ApsaraCJ#VinothBabu#JananiAshokKumar#VyishaliKemkar#Roshan…
— SmartBarani (@SmartBarani) October 4, 2025
இதில் வி.ஜே.பார்வதி, , கம்ருதீன், மற்றும் வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்டோர் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்தாலும், அதிகமாக விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள். குறிப்பாக, சமீபகாலமாக இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்டவர் திவாகர். இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான வீடு ஹைட்டெக் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசனிகளில் இல்லாத வகையில், பெட்ரூம் அருகிலேயே திறந்த வெளியில் 'ஜக்குஸி' வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.