அக்ஷரா கொடுத்த முத்தம்… இது மட்டும் தப்பு இல்லையா?

Tamil Biggboss Update : கயிற்றை விட்டு எழுந்து செல்லும்போது அக்ஷரா தான் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த வருணுக்கு முத்தம்கொடுத்துவிட்டு சென்றார்.

Tamil Biggboss Season 5 Update :விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே மீதமுள்ள நிலையில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் படலம் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் போட்டியாளர்களுக்குள் கடுமையான மோதலும் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் சர்ச்சைகளிலும் சிக்கி வருகினறனர்.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சஞ்சீவ், அமீர் ஆகியோர் தங்களின் வாழ்வியலைப்பற்றி பேசினர். இதற்கிடையே அமீர் பாவனி பின்னால் சுற்றுவது அவர் தம்பி என அழைத்தும் அவரை காதலிக்கிறேன் என்று என்று கூறியது என அமீர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோட்டில் இரவு நேரத்தில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த விவகரத்தில் முதலில் முத்தம் கொடுத்த அமீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் அதற்கு அடுத்து பாவனி அமீரை தடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்க தொடங்கினர். மேலும் தம்பி என அழைத்தும் அமீர் தன்னிடம் நெருக்கி பழக பாவனி அனுமதிப்பது ஏன் என்று கேட்டு வருகின்றனர். மேலும் அமீர் முத்தம் கொடுத்த காட்சி குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் எதுவும் கேட்காதது ஏன் என்றும், அபிநய் விவகாரம் குறித்த அவ்வளவு பேசிய கமல் இந்த முத்த விவகாரம் குறித்து வாயை திறக்காதது ஏன் என்று கேட்டு வருகினறனர்.

இந்த சர்ச்சை தற்போது தீயாய் பரவி வரும் நிலையில், தற்போது அடுத்த முத்த சர்ச்சை வெடித்துள்ளது கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான எபிசோட்டில், கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கயிற்றை யாரும் விடக்கூடாது என்ற நிலையில், அனைவரும் கயிற்றை பிடித்துக்கொண்டு சோபாவில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது கயிற்றை விட்டு எழுந்து செல்லும்போது அக்ஷரா தான் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த வருணுக்கு முத்தம்கொடுத்துவிட்டு சென்றார்.

அப்போது வருணும் இந்த முத்தத்திற்கு ரியாக்ஷன்கொடுப்பது போல சிரித்த முகத்துடன் இருந்தார். இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்ஷராவை திட்டி தீர்த்து வருகின்றனார். ஆனால் ஒரு சிலர் நணபர் என்ற முறையில் அக்ஷரா முத்தம் கொடுத்திருப்பார் என்று சப்போர்ட் வாங்கினாலும்,  அமீர் ஏன் நட்பு ரீதியாக முத்தம் கொடுத்திருக்க கூடாது என்று கேட்டு வருகின்றனர். அமீர் முத்தம் கொடுத்தது தவறு என்றால் அதே அக்ஷரா செய்தால் சரியா என்று கேட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil boggboss season 5 akshara kiss to varun controversy troll

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express