விஜய்-அஜித்: ரசிகர்களின் சத்தம் உங்கள் காதுகளில் இன்னும் விழவில்லையா?

தமிழகத்தின் பெரும்பாலான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

By: Updated: March 26, 2020, 10:26:42 AM

Corona Awareness : உலகம் முழுக்க கொரோனா தலை விரித்து ஆடுகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று மெல்ல மெல்ல பல உலக நாடுகளுக்கும் பரவியது. அந்த பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரையை சேர்ந்த ஒருவர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு பயண வரலாறு ஏதுமில்லை. ஆனால் மற்ற அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்நிலையில் இந்தக் கொரோனா சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு.. பார்த்திபனின் சூப்பர் பரிசு….

தவிர, திரை பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ’அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மக்களாகிய நாம் ஒத்துழைப்பு தரவேண்டும்’ என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கேட்டிருந்தார். ’தொழில் பாதித்துவிடும் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் என்ற பல்வேறு கேள்விகள் உங்களுக்குள் இருந்தாலும் அதை எல்லாம் செய்ய நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பது அவசியம் ஆகையால் இந்த மூன்று வாரம் வெளியில் வராமல் அரசின் உத்தரவை கடைப்பிடிக்குமாறு’ நடிகர் கமல் கேட்டிருந்தார். அதோடு எளிய மக்கள் பயன்படுத்தும் முறையில் தனது வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த ஒரு விழிப்புணர்வு வீடியோவில், ’நமக்காக காவல்துறையினர் அனைவரும் தெருவில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக தயவுசெய்து வீட்டிற்குள் இருங்கள். அனைத்து முக்கியமான இடங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இனி வெளியில் செல்ல நமக்கு அவசியமில்லை. எனவே வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார். ’டாக்டர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அவர்களது உயிரை மட்டும் பனையம் வைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையும் இதில் அடங்கியுள்ளது ஆகையால் வீட்டிற்குள் இருந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவோம்’ என்று தெரிவித்திருந்த நடிகர் தனுஷ், 21 நாள் தேசிய முடக்குதலையும் தான் வரவேற்பதாக தெரிவித்து இருந்தார்.

_

கொரோனோ வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த வைரஸ் தாக்குதலை தடுக்கும் முறைகளையும், சமூக விலகி இருத்தலையும் பற்றி நடிகை சிம்ரன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வைரஸின் அபாயம் நிறைய பேருக்கு புரியவில்லை. இந்த தாக்குதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் ஆகையால் சமூக விலகியிருத்தல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என நடிகை வரலட்சுமி கேட்டிருந்தார்.

Corona Updates Live : கொரோனாவை தடுப்பது எப்படி – ‘ஜி-20’ தலைவர்கள் இன்று ஆலோசனை

கொரோனா தாக்குதல் தமிழகத்தை எட்டிப்பார்க்க தொடங்கியதும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த மாதிரி இணையத்தின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது. தங்கள் ரசிகர்கள் மேல் அக்கறை வைத்திருக்கும் அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. வெறித்தனமான பல ரசிகர்கள் பெற்றோர்கள் சொல்வதை காட்டிலும்,  தங்கள் பாசத்திற்குரிய பிரபலங்கள் சொல்வதை நிச்சயம் கேட்கிறார்கள்.  ஆகையால் விஜயும் அஜித்தும் விரைவில் மௌனம் கலைய வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil celebrities corona awareness video rajini kamal surya vijay ajith

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X