இதுதான் பார்த்திபன் ‘டச்’: பொக்கேவுக்கு பதிலாக கொடுத்த பரிசைப் பாருங்க!

நடிகர் பார்த்திபன், சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து, நேரில் பாராட்டு தெரிவித்ததுடன் பூங்கொத்துக்கு பதிலாக, வித்தியாசமாக 5 லிட்டர் சானிடைசர் கேனை வழங்கினார்.

By: Updated: March 26, 2020, 11:19:35 AM

நடிகர் பார்த்திபன், சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து, நேரில் பாராட்டு தெரிவித்ததுடன் பூங்கொத்துக்கு பதிலாக, வித்தியாசமாக 5 லிட்டர் சானிடைசர் கேனை வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதை திரைத்துறை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு பிரசாரமாக முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தனித்திரு, விழிப்புணர்ச்சியோடிரு, ஆரோக்கியத்துடனிரு என்று கூறும் நடிகர் பார்த்திபன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.

பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.

இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன். அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார்.

தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுற்றிக் காட்டினார்.” இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நன்றி

நடிகர் பார்த்திபனின் வாழ்த்து மற்றும் பரிசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus covid 19 actor parthiban vijayabaskar corona awarness

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X