Thala Diwali, Deepavali Celebrations 2020: தீபாவளி பண்டிகை என்றதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஒருவித புத்துணர்வு ஒட்டிக் கொள்ளும். புத்தாடை, பட்டாசு, பலகாரம் என மகிழ்ச்சியாக இந்த நாளைக் கொண்டாடுவார்கள். அந்த வகையில், இந்த வருடம் தலை தீபாவளியைக் கொண்டாடும் சினிமா பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.
சதிஷ் - சிந்து
காமெடி நடிகர் சதீஷ் - சிந்து ஜோடிக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. அதனால் இது தான் அவர்களின் தலை தீபாவளி. இதனை இன்னும் சந்தோசமாக்கும் விதத்தில், சமீபத்தில் தான் இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
மஹத் - பிராச்சி
மாடல் பிராச்சியுடன் காதல், பின்னர் பிக் பாஸ் யாஷிகா மீது ஈர்ப்பு என நடிகர் மகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது. இதனால் அவரை பிரிவதாக பிராச்சி அறிவித்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளி வந்ததும், தங்கள் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொண்டனர். பின்னர் இந்த காதல் ஜோடி 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
யோகி பாபு - மஞ்சு பார்க்கவி
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு-மஞ்சு பார்கவி ஜோடி இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தினர் மட்டும் திருமணத்தில் கலந்துக் கொண்ட நிலையில், விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக அறிவித்தார் யோகி பாபு. ஆனால் அதற்குள் கொரோனா எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது.
ஆர்.கே.சுரேஷ் - மது
கடந்த அக்டோபர் மாதத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அவர்களும் இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
காஜல் அகர்வால் - கெளதம் கிட்சுலு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை சில வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா பிரச்னையால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். தற்போது ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்.
ராணா - மிஹீகா பஜாஜ்
தெலுங்கு நடிகர் ராணா, தொழில் முனைவோர் மீஹிகா பஜாஜ் இருவருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடந்தது. இவர்களும் இந்தாண்டு தலை தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”