Celebrities with their Pets : வீடுகளில் நாய், பூனை, புறா, கிளி, மீன் முயல் போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக நகரத்தில் வாழ்பவர்களுக்கு முக்கிய பொழுதுப்போக்கு அம்சமாக விளங்குவது இந்த செல்லப் பிராணிகள் தான். அதுவும், வேலைக்கு செல்லும் பெற்றோர்களால் வளர்க்கப்படும் நகரத்துக் குழந்தைகளுக்கு உற்ற தோழனாக கம்பெனி கொடுப்பது, செல்ஃபோன் கேம்ஸும், செல்லப் பிராணிகளும் தான்.
எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்க்கும் போதும், உங்களுக்கும் அந்த பிராணிக்கும் இடையே ஒரு தோழமை உணர்வு ஏற்படும். பிரச்னைகளுக்கு உள்ளானவர்கள், தனிமையில் இருப்பவர்கள் பலருக்கு வலி நிவாரணியாகவும் செல்லப் பிராணிகள் இருக்கின்றன. பூனை அல்லது பறவையை வளர்க்கும் பொழுது உங்களுக்கு பரஸ்பர புரிதல் உணர்வு மட்டுமே வளரும். ஆனால், நாயை வளர்க்கும் போது வெறும் புரிதல் மட்டும் இல்லாமல் உண்மையான நட்புணர்வும் ஏற்படும். ஆகவே செல்லப் பிராணிகளைப் பொறுத்தவரை, பலரும் நாய்களை விரும்பி வளர்ப்பார்கள்.
அப்படி தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயுடன், நட்சத்திரங்கள் இருக்கும் படத்தொகுப்பை இங்கே காணலாம்.












