/indian-express-tamil/media/media_files/njH4AsaVxyYHpr3Mbl9q.jpg)
கிழக்கு வாசல் சீரியல்
விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த சீரியலில் சந்திரமுகி படத்தின் குழந்தை நட்சத்திரம புதிதாக என்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல்கள் அரங்கேறி வரும் நிலையில், பழைய சீரியல்களிலும் விறுவிறுப்பை அதிகரிக்க புதிய நடிகர்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கிழக்கு வாசல் சீரியலில் புது நடிகை ஒருவர் என்டரி ஆக உள்ளார்.
நடிகர் பிரபுவின் சிவாஜி புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படம், அதிக நாள் தியேட்டரில் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நாசர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில் பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பிரகர்ஷரிதா.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ‘’அத்திந்தோம் திந்தியம்’’ பாடலில் பிரகர்ஷரிதா சிறப்பாக நடித்திருந்தார். சந்திரமுகி மட்டுமல்லாமல், சன்டிவியின், வேலன், செல்வி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், பெரிய இடைவெளிக்கு பின் தற்போது கிழக்கு வாசல் சீரியலில் என்டரி ஆக உள்ளார். அதே சமயம் இந்த சீரியலில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா? அல்லது முழுநீளா கேரக்டரில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனம் தயாரித்து வரும் இந்த சீரியல் ரேஷ்மா நாயகியாக நடித்து வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் வெங்கட் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர், நாகேஷின் மகன் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த சீரியல் பகல் நேரத்தில் ஒளிபரப்பாவதால் போதுமான அளவு வரவேற்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.