Advertisment

அசைக்க முடியாத டி.ஆர்.பி-யில் சன் டி.வி: பாண்டியன் ஸ்டோர்ஸ் பின்னடைவு; ஆல்யா மானசா சீரியல் அப்!

டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் சன் டிவி சீரியல்கள்; நகர்ப்புற பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் டிவி

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியல்

டி.ஆர்.பி ரேட்டிங்கில் விஜய் டிவியை விட சன் டிவி முன்னிலையில் உள்ளது. அதேநேரம் நகர்ப்புற பிரிவில் விஜய் டிவியே ஆதிக்கம் செலுத்துகிறது.

Advertisment

முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் ஒளிப்பரப்பி வருகின்றன. இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே போட்டி அதிகமாக காணப்படுகிறது. கடந்த வாரத்தில் சன் டிவியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நகர்ப்புற பிரிவில் விஜய் டிவி முதலிடத்தில் இருந்தது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்திருந்தது.

இதையும் படியுங்கள்: பாக்யலட்சுமி சீரியலில் பிரபல நடிகர் என்ட்ரி… கதையில் பெரிய ட்விஸ்ட்… பாக்யா சமாளிப்பாரா?

எந்த சீரியல் முன்னணியில் உள்ளது என்பதை கணக்கிட டி.ஆர்.பி ரேட்டிங் உதவுகிறது. இதன்மூலம் எந்த சீரியலுக்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை வழங்குகிறார்கள் என்பதை கணக்கிட முடியும். இவற்றில் எந்த சேனல்களின் சீரியல்கள் அதிகமாக முன்னணியில் உள்ளது என்பதும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நகர்ப்புற வகையிலும் எந்தெந்த சீரியல்கள் முன்னிலையில் உள்ளன என்ற பட்டியலும் வாராவாரம் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த வாரத்தில் இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் டிவியின் சீரியல்கள் முதலிடத்தை பிடித்தன. முதல் ஐந்து இடங்களில் 3வது மற்றும் ஐந்தாம் இடங்களை சன் டிவி பிடித்த நிலையில், முதல் இரண்டு இடங்களையும் 4வது இடத்தையும் விஜய் டிவி பிடித்தது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்த நிலையில் 4வது இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்திருந்தது.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நகர்ப்புற வகை பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 10.4 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை மற்றும் சன் டிவியின் இனியா தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

சன் டிவியில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்துவரும் இனியா சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் டிவியின் கயல் சீரியலுக்கு அடுத்தபடியாக இனியா சீரியல் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இனியா சீரியல் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கயல் சீரியல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக சன் டிவிதான் 2192.14 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. 1417.96 புள்ளிகளுடன் விஜய் டிவி இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment