Advertisment

'இன்ஸ்ட்டாவில் நீங்க இதைப் பண்ணலையே?': வெங்கடேஷ் பட்- மாதம்பட்டி ரங்கராஜ் திடீர் உரையாடல்

பேட்டி எடுத்த குரேஷி, ரங்கராஜூடன் வெங்கடேஷ் பட்டை பேச வைத்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Madhamatty bhat

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது வெங்கடேஷ் பட் – ரங்கராஜ் இருவரும் பேசிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் வீக் எண்ட் ஷோ என்றால் குக் வித் கோமாளிக்கு முதல் இடம் உண்டு. 5 சீசன்கள் முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியில், முதல் 4 சீசன்கள், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களான பங்கேற்றிருந்தனர். இவர்கள் இருவருக்குமே அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருந்த நிலையில், 5-வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதனால் அடுத்து யார் நடுவர் என்ற கேள்வி எழுந்தது.

அப்போது மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் நடுவராக தாமுவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சீசன் தொடங்கியது முதல் வெங்கடேஷ்’ பட் இடத்தை ரங்கராஜ் பிடித்துவிட்டார் என்ற டாக் பரவியது. நிகழ்ச்சியின் மூலம் அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் உயர்ந்த நிலையில், கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5 முடிவுக்கு வந்தது.  

இதனைத்தொடர்ந்து ரங்கராஜ் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே சமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வெங்கடேஷ் பட், டாப் குக் டூப் குக் என்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில், நடுவராக பங்கேற்று வருகிறார். தற்போது அவரை பேட்டி எடுத்த கோமாளி குரேஷி, ரங்கராஜூடன் வெங்கடேஷ் பட்டை பேச வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரங்கராஜூடன் போனில் பேசிய வெங்கடேஷ்’ பட், நான் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு மெசேஜ் செய்து, ஃபரண்ட் ரிக்யூஸ்ட் கொடுத்திருந்தேன் நீங்கள் அக்சப்ட் பண்ணவே இல்லை என்று சொல்ல, அதை கேட்ட ரங்கராஜ், நான் அதை பார்க்கவில்லை சார். டீம்தான் ஹேண்டில் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப சாரி என்று சொல்கிறார். அதன்பிறகு, பரவாயில்லை என்று சொல்லும் வெங்கடேஷ் பட், ரங்கராஜ்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் நீங்கள் ஹெலிகாப்டர் வாங்கும் கனவை நிறைவேற்றி, இன்னும் பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Cook With Comali Madhampatty Rangaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment