Advertisment

அப்போ டிவி பிரபலம்: இப்போ முன்னணி நடிகர்; இந்த சிறுவன் யார்னு சொல்லுங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Sivakarthikeyan 3

முன்னணி நடிகர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இணையதள வசதி பெருகி வரும் இன்றைய காலக்கட்டத்தில், சினடமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இவரை யார் என்ற கண்டுபிடியுங்கள் என்ற ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் அளவுக்கு பல பதிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த நடிகர் யார் என்று நினைவுக்கு வருகிறதா? அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான்.

விஜய் டிவியின் தொகுப்பாரளாக களமிறங்கி தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்த இவர், மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை, டாக்டர், ரெமோ, டான் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த சிவகார்த்திகேயன், குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

Sivakarthikeyan amara

தற்போது முன்னணி இயக்குனராக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் வெளியாக உள்ளது. நடிகராக மட்டுமல்லமல் தயாரிப்பாளராகவும் இருக்கும் சிவகார்த்திகேயன், கனா உள்ளிட்ட சிறப்பான படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் 3-வது குழந்தைக்கு அப்பாவான இவர், அமரன் மற்றும் ஏ,ஆர்.முருகதாஸ் படங்களை முடித்துக்கொண்டு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment