Advertisment

ரவுடி பேபியாக மாறிய சரத்குமார் - ராதிகா: மகள் திருமணத்தில் நடனமாடி அசத்தல்; வைரல் வீடியோ!

மகள் வரலக்ஷ்மி திருமணத்திற்கு முந்தைய விழாவில் ராதிகா சரத்குமார் இருவரும் நடனமாடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Sarathkumar Radhika Dance

சரத்குமார் - ராதிகா

வரலக்ஷ்மி சரத்குமார் நிலக்கோலாய் சச்தேவ் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவில் நடிகை ராதிகா - சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிரான சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். இவர் நாயகியாக நடித்ததை விட, வில்லி கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவரின் நீண்டநாள் காதலர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனையடுத்து இன்று (ஜூலை 2) சென்னையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமார் அவரின் மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும், திருமணத்திற்கு முந்தைய விழாவை சிறப்பிக்கும் வகையில், மேடையில் நடனமாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ராதிகா பொன்மகள் வந்தாள் பாடலுக்கு நடனமாடுவதைக் காண முடிந்தது.  அதே நேரத்தில் அவரது கணவர் சரத்குமாரும் ஒரு காதல் பாடலுக்கு தனது மனைவியுடன் இணைந்து நடனமாடினார்.

61 வயதான நடிகை ராதிகா, வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் தனது வைரல் நடனம் மூலம் தனது தான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளார். அதேபோல் அவரின் நடன திறமையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சங்கீத விழாவைத் தொடர்ந்து, வரலக்ஷ்மி மற்றும் நிக்கோலாய் சச்தேவ் அவர்களின் வாழ்க்கையின் சிறப்புத் தருணத்தைக் கொண்டாடும் வகையில் அவர்களது திருமணத்திற்கு முன்னதாக ஒரு சிறிய கொண்டாட்டத்தை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், த்ரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, கீர்த்தி, அனிதா விஜயகுமார் மற்றும் பல சினிமா நட்சத்திரங்களும்  கலந்து கொண்டனர், தனது திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அல்லு அர்ஜுன் மற்றும் பல துறைகளில் உள்ள பல நட்சத்திரங்களை வரலட்சுமி அழைத்திருந்தார். இந்த திருமணம் சென்னையில் உள்ள பிரபல ரிசார்ட்டில் நடைபெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Varalakshmi Sarathkumar Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment