தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த ஜெமினி கணேசன் சாவித்ரி இருவரும் விவாகரத்து ஆன பின் எடுக்கப்பட்ட ஒரு பாடலில் இருவரும் அற்புதமாக நடித்திருந்தாலும், சாவித்ரி சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றே தகவல்கள் உள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியை எடுத்துக்கொண்டால் அதில் முக்கியமாக ஜெமினி கணேசன் – சாவித்ரி தம்பதிக்கு இடம் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், 1952-ம் ஆண்டு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சாவித்தி ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சாவித்ரி – ஜெமினி கணேசன் இருவரும் கருத்து வேறுபாடுக காரணமாக பிரிந்தனர். அதன்பிறகு வெளியான படம் தான் பூஜைக்கு வந்த மலர். 1965-ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு வாலி பாடல்கள் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் வரும் மையேந்தும் விழியாலே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தொடங்கும்போது ஜெமினி கணேசன் சாவித்ரி இருவரும் இணைந்திருந்த நிலையில், படப்பிடிப்பு நடுவிலேயே இருவரும் பிரிந்தனர். ஆனாலும் படப்பிடிப்பில் எவ்வித பாதகமும் நடைபெறவில்லை. அதே சமயம் இவர்கள் இருவரும் பிரிந்து 2 வாரங்களுக்கு பிறகு இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
முக்தா சீனிவாசன் தனது கலைநயத்தின் மூலம் சிறப்பாக இந்த பாடலை படமாக்கியிருந்த நிலையில், விவாகரத்து பெற்று 2 வாரங்கள் கழித்து முன்னாள் கணவருடன் நடிக்கிறோம் என்று எண்ணாமல் சாவித்ரி – ஜெமினி கணேசன் இருவரும் காதலர்கள் போல் அந்த பாடலில் சிறப்பாக நடித்திருந்தனர். அதே சமயம் இந்த பாடலை படமாக்கும்போது ஒருநாள் சாவித்ரி மது அருந்திவிட்டு படப்பிடிப்புக்கு வந்தாக கூறப்படுகிறது.
மது அருந்திவிட்டு வந்த அவர், படப்பிடிப்பின் இடையில் மயங்கி விழுந்ததாகவும், அப்போது ஜெமினி கணேசனிடம் சொல்லி அவரை வீட்டில் விட்டுவிடுமாறு படக்குழுவினர் கூறியதாகவும் ஒரு தகவல் உள்ளது என்று, அலையோசை அமுதபாரதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“