தமிழ் சினிமாவில் 4 திருமணங்கள் செய்த நடிகர் ஜெமினி கணேசன், பெண்கள் விஷயம் குறித்து கொடுத்த அறிவுரையை ஏற்றுக்கொண்டாலும் அதை எதிர்த்து நடிகர் சிவக்குமார் ஒரு பெரிய கேள்வியை கேட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் நடிகரும் சிறந்த ஓவியருமான சிவக்குமார், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார்.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது. அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு ஏ.வி.எம். தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் சிவக்குமார் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவக்குமார், ஒரு சிறந்த ஒவியரும் கூட. தான் பார்ப்பதை தத்ருர்பமாக வரையும் திறன்கொண்ட சிவக்குமார், தான் வரைந்த ஓவியங்களை வைத்து எக்ஸிபிஷன்கள் நடத்தியுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்த சிவக்குமார் அவர்களின் ஓவியங்களை வரைந்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
ஒருமுறை கங்கா கௌரி படத்தின படப்பிடிப்பிற்காக இருவரும் பெங்களூர் சென்றுள்ளனர். பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜெயலலிதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். படத்தின் படப்பிடிப்பிற்காக விமானத்தில் ஒருமுறை ஜெமினி சிவக்குமார் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளனர். அப்போது சிவக்குமார் கையை பிடித்து பார்த்த ஜெமினி கணேசன், டேய் மாப்ள நீ பெண்கள் விஷயத்தில் ஷாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவக்குமார் ஏன் மாமா நீங்க மட்டும் பிருந்தாவனத்து நந்தகுமார் மாதிரி பெண்களுடன் சுற்றுவீர்கள். நான் மட்டும் ஒரே ஒரு பெண்ணோடு இருக்கனுமா என்று கேட்க, இப்போது உள்ள நடிகர்களில் நான்தான் டிகிரி முடித்தவன். எல்லாமே படிப்பேன். இவ்வளவும் கொடுத்த ஆண்டவன் பெண்கள் விஷயத்தில் என்க்கு வீக்னஸை கொடுத்துவிட்டான். அதனால் தான் நான் இப்படி இருக்கிறேன். நீயாவது ஜாக்கிரதையாக இரு என்று கூறியுள்ளார் ஜெமினி கணேசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“