தமிழ் சினிமாவில் தனது மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன். காதல், தாலாட்டு, சோகம், என அனைத்திற்கும் தனது வரிகள் மூலம் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசன் இன்று இல்லை என்றாலும் அவரது பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.வியும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
எம.எஸ்.வி – கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இவர்களின் பாடல்களுக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. தான் அறிமகமான காலக்கட்டத்தில்பல கவிஞர்கள் இருந்திருந்தாலும், நாளுக்கு நாள் பல ஹிட் பாடல்களை எழுதி புகழின் உச்சத்திற்கு சென்ற கண்ணதாசன், தனக்கு போட்டியாக யாரும் இல்லை என்ற நினைத்தக்கொண்டு எம்.எஸ்.வியுடன் இணைந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில், கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி வந்துவிட்ட நிலையில், கண்ணதாசனக்கான வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது. அவரின் அரசியல் மோதல்களும் வாய்ப்புகள் குறைய ஒரு காரணமாக இருந்துள்ளது. இந்த நேரத்தில் கண்ணதாசன் சிவாஜி படத்திற்காக தான் எழுதிய ஒரு பாடலால் தான் தனக்கான வாய்ப்பு குறைந்துவிட்டதாக ஏ.வி.எம். நிறுவனத்தில் புலம்பியதாக தயாரிப்பாளர் ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1962-ம்ட ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் படித்தால் மட்டும் போதுமா. சிவாஜி சாவித்ரி, சகலோக்சனா, பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்த நிலையில், ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘’நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை எனற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற வருகிறது. ஆனால் இந்த பாடல் தான் தனக்கு போட்டியாக பல கவிஞர்கள் உருவாக காரணம் என்று கண்ணதாசன் உறுதியாக நம்பியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் இந்த பாடல் அறச்சொற்களால் எழுதப்பட்டுள்ளதாக அவர் நினைத்துள்ளார். அடிப்படையில் தமிழ் சினிமாவின் முக்கிய கவிஞராக இருந்த கண்ணதாசன் நான் கவிஞனும் இல்ல என்று எழுதியதால் தான் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நினைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“