அறிமுகம் படம் என்றாலும், சிவாஜி கணேசனுக்காக 3 மாதங்கள் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது ஏ.வி.எம். நிறுவனம் இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக வெற்றிகளை குவித்த நிலையில், தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக இருந்தார். அப்போது இவரது கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதும், பல தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து படம் நடித்திருந்தார் சிவாஜி.
என்ன தான் நடிகர் திகலம் என்று அழைக்கப்பட்டாலும், நாடகத்துறையில் இருந்து சினிமா உலகிற்கு வந்த சிவாஜி கணேசன், பல தடைகளை கடந்துதான் சினிமாவில் முன்னேற்றம் கண்டு உச்ச நட்சத்திரமாக ஜொலித்துள்ளார். 1952-ம் ஆண்டு இவரின் அறிமுக படமான பராசக்தி படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் பஞ்சு. இந்த படத்தை தயாரித்தவர் பெருமாள் முதலியார் என்பவர் தான். படம் 25 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தாயராகியுள்ளனர்.
அந்த சமயத்தில் பெருமாள் முதலியார் ஏ.வி.எம்.நிறுவனர் மெய்யப்படட செட்டியாரிடம், சென்று எனக்கு ஒன்றும் தெரியாது இந்த படத்தை நீங்கள் தான் ஒரு சிறந்த படமாக எடுத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட மெய்யப்ப செட்டியார் இதுவரை எடுத்த அனைத்து காட்சிகளையும் போட்டு பார்த்துள்ளார். இதை பார்த்த அவர், படத்தில் இந்த பையன் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அவனது கன்னங்கள் ஒட்டிப்போய் ஆளெ ஒல்லியாக இருக்கிறான்.
இந்த படத்தின் படப்பிடிப்பை 3 மாதங்களுக்கு நிறுத்துங்கள். இந்த இடைவேளையில் சிவாஜியின் உடலை ஏற்றுங்கள் என்று கூறியுள்ளார். அந்த 3 மாதங்கள் கழித்தும் எதாவது மாற்றம் இல்லை என்றால், இந்த பையனை மாற்றிவிட்டு கே.ஆர்.ராமசாமியை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்று மெய்யப்ப செட்டியார் சொல்ல, பெருமாள் முதலியார், இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளனர்.
அதன்பிறகு படப்பிடிப்பு 3 மாதங்கள் நிறுத்தப்பட்டு அதன்பிறகு நடத்தப்பட்டது. 3 மாத இடைவெளியில் தனது தோற்றத்தை மாற்றிய சிவாஜி கணேசன், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், சிவாஜி நடிப்பிலும், வசீகர்திலும் தனி முத்திரை பதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“