விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கோட் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் லோகேஷ்.கனகராஜ் மற்றும் இயக்குனர் அட்லி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு வெங்கட் பிரபு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தை முடித்த தளபதி விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்துள்ளார். பழைய ஹீரோ மைக் மோகன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், சினேகா, லைலா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், விஜய் 90-களில் இருந்தது போன்ற தோற்த்தில் நடித்துள்ள நிலையில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் ஏ.ஐ.டெக்னாலஜி மூலம் கொண்டுவர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது விஜயகாந்தின் ஏ.ஐ.டெக்னாலஜி புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 5) கோட் படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், படத்தில் விஜய் தனது தற்போதைய தோற்றத்திலும், ஏ.ஐடெக்னாலஜி மூலம், 90-களில் இருந்த தொற்றத்திலும் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே நாளை வெளியாக உள்ள கோட் படத்திற்கு விஜயின் தீவிர ரசிகரும் இயக்குனருமான அட்லி, மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இணைந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கோட் படத்திற்காக உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. திரைப்படத்திற்காக ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் வாழ்த்துக்கள். இப்படிக்கு உங்கள் பாய்ஸ் என்று லோகேஷ் அட்லியுடன் இருக்கும் போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த பதிவை ஷேர் செய்த இயக்குனர் வெங்கட் பிரபு, லவ்யூ டா ப்ரதர்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.
விஜயின் தீவிர ரசிகரான இயக்குனர் அட்லி தமிழில் தான் இயக்கிய 4 படங்களில் 3 படங்களை விஜய் நடிப்பில் இயக்கியிருந்தார். அதேபோல் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் 2 படங்களை விஜய் நடிப்பில் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“