New Update
/
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரம்பா திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிவிட்ட நிலையில், தற்போது அவரது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவுக்கு போட்டியாக வந்துவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.
90-களின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. 1992-ல் தெலுங்கில் வெளியான ஆ வொக்கட்டே அடக்கு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பல தெலுங்கு படங்களில் நடித்த ரம்பா 1993-ம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து செங்கோட்டை, சுந்தரபுருஷன், தர்மசக்கரம், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரம்பா, கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி, பேஸ்பூரி ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ளார். சின்னத்திரையில் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 என ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார்
இதனிடையே ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில். திருமணத்திற்கு பின் ரம்பா தனது கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்பா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அம்மாவுக்கு போட்டியாக மகளே வந்துவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவர் ரம்பாவின் ஜெராக்ஸ் என்றும், விரைவில் சினிமாவில் என்ட்ரி ஆவாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.