மஞ்சள் வீரன் படத்தின் பூஜையின்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், படத்தின் நாயகன் டிடிஎஃப் வாசனுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வாசன் பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் டிரைவிங் செய்து சமூகவலைதளங்களில் ட்ரெண்டானர் டிடிஎஃப் வாசன். பைக்கில் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் அதிவேகமாக பைக் ஓட்டி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவுடன் அதிவேகமாக சென்றதாக இவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே பைக்கில் சாகசம் செய்து வந்த டிடிஎஃப் வாசன் தற்போது திரைத்துறையில் நுழைந்துள்ளார். மஞ்சள் வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை செல்வம் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பைக்கில் அதிவேகமாக கையில் சூலாயிதத்துடன் பயணிப்பது போல் வெளியானது இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனிடையே படபூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிஎஃப் வாசனுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே பெரும் விவாதம் நடைபெற்றது. இந்த படத்திற்கு ரைடர் என்று தலைப்பு யோசித்ததாகவும் அதற்கு படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருக்கும்போது படத்தில் சூலாயிதத்துடன் பைக்கில் அதிவேகமாக செல்வர் போல் இருக்கிறது. இது உங்களை பின்தொடரும் இளைஞர்களை பாதிகாதா என்று கேடடனர்.
இதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன், இது முழுக்க முழுக்க இயக்குனரின் ஐடியா என்று கூறி தலைப்பு தமிழில் வைக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் இதற்கும் எதாவது சொல்லி மாற்ற சொல்லியிருக்கலாமே என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த எத்தனையோ இயக்குனர்கள் இருக்கிறார்கள் அனைவரும் நம் சொல்வதை கேட்பார்களா? நாம் சொல்வதை 5 சதவீதம் கேட்டாலும் மீதமுள்ள 95 சதவீதம் அவர்கள் எடுக்கும் முடிவு தான் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் உங்களை தொடர்புகொள்ளவே ஒன்னறை வருடங்கள் ஆகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன், நான் 3 செல்போன் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று கூட நான் பயன்படுத்தவில்லை. என் உதவியாளர்கள் தான் பயன்படுத்துகிறார்கள். நான் தமிழ்நாட்டில் இருப்பேன் திடீரென காஷ்மீரில் இருப்பேன் என்று சொன்னார். இதற்கு கவுண்டர் கொடுக்கும் விதமாக டிடிஎஃப் வாசனுடன் வந்திருந்த கூல் சுரேஷ் திடீரென போலீஸ் ஸ்டேஷனில் இருப்பார் என்று கூறியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சாலையில் வானகத்தை 40 கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என்ற விதியை கடைபிடிக்கிறீர்களா என்று கேட்டபோது, 40 கி.மீ வேகத்தில் யாராவது செல்ல முடியுமா? இங்கு இருக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது வாகனத்தை 40 கி.மீ வேகத்தில் ஓட்டமாட்டார்கள் இதை நீங்களே ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று சொன்னபோது, அரசு விதிமுறை என்று பத்திரிக்கையாளர் சொல்ல, அப்படி என்றால் நான் முதல் கீயரிலேயே செல்வேன் என்று கூறியுள்ளார்.
உங்களை பின் தொடரும் இளைஞர்கள் அனைவரும் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்கிறார்கள். இதை கேட்டால் நாங்கள் டிடிஎஃப் வாசனை ஃபாலோ செய்கிறோம் அவர் செய்கிறார். அவரை யாரும் கேட்பதில்லை. எங்களை மட்டும் கேட்கிறீர்கள் என்று சொல்வதாக கூறியபோது இப்படி கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது என்று கேட்டுள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது குறித்த பதிவுகளை சமூகவலைதளங்களில் வெளியிடுவதால் தான் கூட்டம் வருகிறது என்று கேட்டபோது செய்தியாளர்களுக்கும் டிடிஎஃப் வாசனுக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.
இதை கேட்ட வாசன், நான் சமூகவலைதளங்களில் எந்த பதிவையும் வெளியிடுவதில்லை. ஆதாரத்தை காட்டுங்கள் அதன்பிறகு பேசுங்கள் என்று கூறியுள்ளார். நான் இங்கு வருதை சொன்னதால் கூட்டம் கூடிவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நான் இங்கு வருவதாக எங்கு சொன்னேன் ஆதாரத்தை காட்டுங்கள் என்று கூறிய டிடிஎஃப் வாசன் பேட்டியை பாதியில் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil