திரைத்துறையில் ரெட் ஜெயண்ட்: விஜய் செய்ததை உதயநிதி செய்ய வேண்டும்; இயக்குனர் பேரரசு!

மற்ற அரசியல் கட்சிகளின் சாயல் அவரது கட்சியில் இருக்க கூடாது. மக்களுக்கு விஜய் என்ன செய்யபோகிறார், அவரது புதிய திட்டங்கள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பேரரசு கூறியுள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகளின் சாயல் அவரது கட்சியில் இருக்க கூடாது. மக்களுக்கு விஜய் என்ன செய்யபோகிறார், அவரது புதிய திட்டங்கள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பேரரசு கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijay and Udhayanithi Perarasu

விஜய் கட்சி தொடங்கி இப்போது தான் 2-வது வருடம் ஆரம்பித்துள்ளது. வெறும் அறிக்கையாக தான் வருகிறது. அவர் இன்னும் களத்தில் இறங்க வேண்டும். மீடியாக்களை சந்திக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு தனது பேட்டியில் கூறியுள்ளளார்.

Advertisment

கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய், அடுத்து 2026 சட்டசபை தேர்தலுக்காக தன்னைளும் தனது கட்சியையும் தீவிரமாக தயார் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வரும் விஜய், தனது கட்சியின், அணிகள், மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அதே சமயம், தமிழகத்தில் நடக்கும், அரசியல் மற்றும் தி.மு.கவின் நடவடிக்கைகள் தனது அறிக்கையில் விஜய் விமர்சனம் செய்து வரும் நிலையில், கட்சி தொடங்கி 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. அவர் மக்களை சந்திக்க வேண்டும். மீடியாக்களை சந்திக்க வேண்டும். தனது கட்சி மக்களுக்கான அரசியல் கட்சி என்று அவர் அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு, விஜய் அரசியல் குறித்து கேட்டபோது, அவரது அரசியல் பயணம் மக்களுக்காக இறங்க வேண்டும். ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளின் கொள்கைகளை வைத்துக்கொண்டால் அது புதிதாக தெரியாது. விஜய் மக்களுக்காக புதிதாக என்ன செய்யப்போகிறார்? மற்ற அரசியல் கட்சிகளின் சாயல் அவரது கட்சியில் இருக்க கூடாது. அதனால் மக்களுக்கு என்ன செய்யபோகிறார், அவரது புதிய திட்டங்கள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisment
Advertisements

விஜய் இப்படி செய்தால் தான் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வரும். இப்போது விஜய்க்கு அவரது ரசிகர்கள் தான் தொண்டர்களாக மாறியுள்ளனர். கண்டிப்பாக அவர்கள் பெரிய ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அவர் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதற்காக இன்னும் நிறைய புதிய திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும். ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் அது ஆளும் கட்சியை எதிர்த்தால் தான் முடியும். அப்போது தான் மக்களின் கவனம் அந்த கட்சியின் மீத திரும்பும்.

அவர் இப்போது செல்லும் பாதை சரியானது தான். ஆளும் கட்சியை விமர்சிக்காமல் எந்த கட்சியும் வளரவும் முடியாது மக்களால் கவனிக்கப்படவும் மாட்டாது. விஜய் அதில் தெளிவாக இருக்கிறார். அதேபோல் விஜய் கட்சியை தொடங்கி இருக்கிறார். இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை. பதவிக்கும் வரவில்லை. அப்படி இருக்கும்போதே அவர், தான் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ஆனால் உதயநிதி அரசியலுக்கு வந்துவிட்டார். அமைச்சர் ஆகிவிட்டார்.

இப்போது துணை முதல்வராகவும் ஆகிவிட்டார். ஆனால் அவர் திரைப்படங்களை வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லை. அதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். விஜய் எப்படி நடிக்க மாட்டேன் என்று சொன்னாரே அதேபோல், உதயநிதி இனி படங்களை தயாரிக்க மாட்டேன் வாங்கி வெளியிட மாட்டேன் என்று அறிவிக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும். அவர் ஆளும் கட்சியை சார்ந்து இருக்கும்போது இப்படி செய்வது ஒரு நெருடலாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: