Advertisment

பில்லா படத்தில் பார்த்த மாதிரியே இருக்கீங்க : நயன்தாரா ரீசன்ட் க்ளிக் வைரல்

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Nayanthara Billa

நயன்தாரா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாரா கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா, கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து இந்தி படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஒரு அழகான கருப்பு கவுன் கழுத்து வளைந்திருக்கும் வகையில் நயன்தாரா உடை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த உடை அவரது கழுத்தை காட்டும் வகையில் அமைந்திருந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த கம்பளத்தில் நின்று நயன்தாரா போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  பாப்பராஸ்ஸோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் நயன்தாரா சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறார்.

மேலும் நயன்தாராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருந்து தனது தனது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். "கருப்பு புதிய கருப்பு" என்ற தலைப்புடன் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கமெண்ட்ஸ் பகுதியில் நயன்தாராவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதில் ஒரு ரசிகர் உங்கள் தோற்றம் "பிரமிக்க வைக்கிறது,"  என்றும் மற்றொருவர் "கவர்ச்சியான ஹாட்" என்றும் எழுதியுள்ள நிலையில், மற்றொரு ரசிகர் அப்படியே பில்லா படத்தில் பார்த்த மாதிரியே இருக்கீங்க என்றும் கூறியுள்ளனர். நயன்தாராலவ் ஆக்‌ஷன் டிராமா படத்திற்கு பிறகு டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் மீண்டும் நிவின் பாலிவுடன் இணைந்து நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment