விமர்சனங்கள் எதிரொலி: இந்தியன் 2 படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Indian 2 Kamla

இந்தியன் 2

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 90-களில் பெரிய வெற்றிப்படமாக இருந்த இந்தியன் படத்தின் 2-ம் பாகம் 28 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியானது.

முதல் படத்தை இயக்கிய ஷங்கரே இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் சுமார் 7,801 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தாலும் இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றதற்கு படத்தின் நீளமும், விறுவிறுப்பு இல்லாத திரைக்கதையும் தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், விமர்சகர்களும் இந்த தகவலை தங்களது விமர்சனங்களில் பதிவிட்டிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர் தற்போது படத்தில் இருந்து 12 நிமிட காட்சிளை நீக்கியுள்ளனர். இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்ட திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

அதேபோல் இந்தியன் 2 படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3-வது பாகத்திற்கான டிரெய்லர் 2-வது பாகத்தின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: