எம்.ஜி.ஆர் வாலி கூட்டணியில் வெளியான முதல் வெற்றிப்படமாக படகோட்டி படம், தீபாவளி ரேஸில் சிவாஜியின் நடிப்பில் வெளியான நவராத்தி படத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றதா என்பது குறித்து தயாரிப்பாளர் முக்தா ரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
துணை நடிகராக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த எம்.ஜி.ஆர் நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான படம் படகோட்டி. எம்.ஜி.ஆர் சரோஜா தேவி, நாகேஷ் மனோரமா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் தான் வாலி – எம்.ஜி.ஆர் கூட்டணியில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற முதல் திரைப்படமாகும்.
அதேபோல் தமிழ் சினிமாவில் நாகேஷ் – மனேரமா காமெடி காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தத, தமிழ் சினிமாவில் முதல் முறையான மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக இந்த படகோட்டி திரைபபடத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் –டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இசையமைக்க, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படம் 1964-ம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 3-ந் தேதி வெளியானது.
இதே தீபாவளி நாளில், சிவாஜி நடிப்பில் நவராத்திரி படம் வெளியானது. சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், சாவித்ரி நாயகியாக நடிக்க, நாகேஷ் மனோரமாக இருவரும் இந்த படத்திலும் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான ஏ.பி.நாகராஜன் இயக்கி தயாரித்திருந்தார்.
1964-ல் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 2-ந் தேதி படகோட்டி திரைப்படமும், நவம்பர் 3-ந் தேதி நவராத்திரி திரைப்படமும் வெளியானது. இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில்,, அந்த ஆண்டில் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது என்று தயாரிப்பாளர் முக்தா ரவி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“